சிறையில் இருந்து விடுதலை ஆனார் திமுக MLA மார்க்கண்டேயன்..!! வெளியே வந்ததும் பரபரப்பு பேட்டி..!!

DMK MLA 2026

முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக கடந்த ஜூன் 20ம் தேதி கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், நெல்லை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியதைத் தொடர்ந்து, பிணை ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார்.


சிறையில் இருந்து வெளியே வந்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நெல்லை மத்திய சிறை என்பது தி.மு.க.வினருக்கு முக்தி தரும் இடம். சிறைச்சாலை என்பது எங்களுக்கு புதிதல்ல. ஜனநாயக உரிமைகளையும், பேச்சுரிமையையும் பறிக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழக அரசு செயல்படுகிறது. எங்களை சிறையில் அடைப்பதால் எங்கள் குரலை அடக்கிவிட முடியாது. ஆயிரம் சிறைகளை சந்திக்கவும் தி.மு.க.வினர் தயாராக உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. சட்டமன்ற உறுப்பினர்கள் காரணமின்றி கைது செய்யப்படுகின்றனர். எங்களை அடக்கி ஒடுக்கினால் சட்டமன்றத்தில் பேசமாட்டோம் என்று தவெக அரசு நினைக்கிறது. அதற்கு கடுமையான அரசியல் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும்.

ரீல்ஸ் மூலம் முதல்வரான விஜய், ரியல் முதலமைச்சராக இருக்க தேவையான பக்குவத்தையும், அனுபவத்தையும் கற்றுக்கொண்டால் அனைத்தும் சரியாகிவிடும். சிறையில் செய்தித்தாள்களை படிப்பதற்கு கூட கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. ஜனநாயகத்தை காக்கும் எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்” என்று தெரிவித்தார்.

Read More : “ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்”..!! உதயநிதி கைதுக்கு எதிராக கொந்தளித்த ஸ்டாலின்..!!

Next Post

அஸ்தி கரைக்க சென்ற இடத்தில் பெரும் சோகம்..!! புதைமணலில் சிக்கி அண்ணன், தம்பி உள்பட 3 பேர் மரணம்..!!

Tue Aug 4 , 2026
கரூர் மாவட்டம் நரசிம்மபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் அருணன் ஆகியோரின் தாயார் தேவகி என்பவர் கடந்த 3ஆம் தேதி காலமானார். அவரது அஸ்தியைக் காவிரி ஆற்றில் கரைப்பதற்காக இருவரும் தங்கள் உறவினர்களுடன் கரூர் அருகே உள்ள நெரூர் காவிரி ஆற்றுப்பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு அஸ்தியைக் கரைத்த பின்னர், அனைவரும் ஆற்றில் இறங்கிக் குளித்துள்ளனர். அப்போது, அவர்களுடன் வந்த உறவினரான சீனிவாசன் (64) என்பவர் ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்று, […]
Karur 2026

You May Like