ஆளுநருக்கு எதிராக போராட்டம் நேரடியாக களத்தில் குதிக்கும் திமுக….! முதல்வர் களமிறங்குவாரா….?

தமிழக ஆளுநராக ஆர் என் ரவி பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் அவர் தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அதோடு அவர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.


இந்த நிலையில், தமிழகத்திற்கு ஆளுநராக வருகை தந்த நாள் முதல் ஆர் என். ரவி அவர்களின் பேச்சு செயல்பாடு நடவடிக்கை உள்ளிட்ட அனைத்துமே சர்ச்சைக்குரியதாகவும் மர்மமானதாகவும் உள்ளதாக கூறப்படுகிறது. அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரிக்கும் ஒரு மாநிலத்தின் ஆளுநராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டவர் என்பதை மறந்து பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்எஸ்எஸ் ஒரு லிட்டர் அமைப்புகளின் பிரதிநிதியாக அவர் தன்னை காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார் என்று திமுகவின் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில் தான் இன்று ஆளுநருக்கு எதிராக திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகளும் ஆளுநர் மாளிகையின் முன்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கின்றன, ஆளுநருக்கு எதிராக போராட்டங்களுக்கு இதுவரையில் மறைமுகமாக ஆதரவு வழங்கி வந்த திமுக, இந்த முறை நேரடியாக களத்தில் குதித்துள்ளது. போராட்டம் மட்டுமல்லாமல் மிக விரைவில் குடியரசுத் தலைவரை சந்தித்து ஆளுநரை வாபஸ் பெறுவதற்கு வலியுறுத்தவும் அந்த கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Next Post

மணிக்கு 63,180 கி.மீ வேகம்.. பூமியை நெருங்கி வரும் ராட்சத விண்கல்.. பூமிக்கு ஆபத்தா..?

Wed Apr 12 , 2023
ராட்சத விண்கல் ஒன்று நாளை பூமிக்கு அருகில் வர உள்ளது. 2012 KY3 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் நாளை பூமியை கடக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது…. சூரியனைச் சுற்றி வரும் வழியில் பூமியில் இருந்து 47,84,139 கிலோமீட்டர் தொலைவில் இந்த விண்கல் கடந்து செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.. மேலும் இந்த 2012 KY3 விண்கல் பூமிக்கு அருகில் உள்ள பொருளாக (NEO) வகைப்படுத்தப்பட்டுள்ளது.. இது அரை கிலோமீட்டர் முதல் […]
asteroid collision 759

You May Like