சென்னை மாநகராட்சியில் போலி வாக்காளர்களால் தான் திமுக வெற்றி பெறுகிறது. மாநகராட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்றவரை ஜெயக்குமார் பிடித்துக் கொடுத்தார்; ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளில் அதிமுகவின் முயற்சியால் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். ஆட்சியில் இருக்கும் திமுக தான் போலி வாக்காளர்களை சேர்ப்பதில் மும்முரமாக உள்ளது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் நேற்று சாத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர் “திமுக ஆட்சி பொறுப்பேற்று 50 மாதங்களை கடந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் சொல்லி கொள்ளும் அளவுக்கு உருப்படியான திட்டங்கள் எதுவும் செய்யவில்லை. ஆனால் தமிழகம் வளர்ந்துவிட்டது என்பது போன்ற தோற்றத்தை திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் உருவாக்குகிறார்கள்.
இன்று வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு இபிஎஸ் வாய்த்திறக்காதது ஏன் என்று துரைமுருகன் கேள்வி கேட்கிறார். 86 வயதில் பொய்யான அறிக்கை வெளியிடுகிறார். இப்போது ஆட்சியில் இருப்பது திமுகதானே… அவர்களிடம் தானே அதிகாரம் இருக்கிறது. ஸ்டாலினுக்குக் கீழே தானே அதிகாரிகள் உள்ளனர். ஸ்டாலின் உத்தரவின்பேரில், அமைச்சரின் கட்டுப்பாட்டில் தானே அவர்கள் செயல்படுகின்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் போன்றவை மாவட்ட ஆட்சியரின் பணி. அதில் இப்போது அதிமுக என்ன செய்ய முடியும்?
அதிமுக, பாஜக கூட்டணி வைத்ததும் திமுகவுக்குப் பயம் வந்துவிட்டது. அவர்களுக்கு வெற்றி பெற முடியாது என்று எண்ணம் வந்துவிட்டது. அதனால் தான் மடைமாற்றம் செய்கிறார். துரைமுருகன் அவர்களே, ஆட்சி உங்களிடம் உள்ளது, நீங்கள்தான் போலி வாக்காளர்களை சேர்க்கிறீர்கள். உண்மையிலேயே தைரியம் இருந்தால் நான் கேட்பதற்குப் பதில் சொல்லுங்கள். அவர் வயதில் மூத்தவர் என்பதால் மதிக்கிறோம். அதேநேரம், தவறான தகவல் வெளியிட்டால் நிச்சயம் கண்டிப்போம்.
திமுக ஆட்சியில் 6 மாதத்தில் 6 காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். மக்களிடம் நன்மதிப்பு பெற்ற அரசு அதிமுக, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது| முதல்வர் ஸ்டாலின் ஆசை வார்த்தை கூறி மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்துள்ளார். அதிமுக ஆட்சியில் இலவச வேட்டி, சேலை, தீபாவளிக்கு வழங்கப்படும் என்றார்.
Read More: டாய்லெட்டில் நீண்ட நேரம் போன் யூஸ் பண்றீங்களா?. மூலநோய் ஏற்படும் ஆபத்து!. மருத்துவர்கள் எச்சரிக்கை!.