“அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம்..” கூட்டணி கட்சி தலைவர்களிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்..!

dmk alliance

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பல ஆச்சர்யங்களை கொடுத்தன.. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்டு இரு பெரும் திராவிட கட்சிகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.. தாங்கள் சந்தித்த முதல் தேர்தலிலேயே விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. அக்கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டசபை அமைய உள்ளது.. அதாவது தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை..


தவெகவுக்கு ஆதரவு வழங்குவதாக காங்கிரஸ் நேற்று அறிவித்த நிலையில், தவெகவின் பலம் 108-ல் இருந்து 113ஆக உயர்ந்தது. எனவே ஆட்சியமைக்க விஜய்க்கு இன்னும் 5 இடங்கள் தேவை.. இந்த சூழலில் ஆட்சியமைக்க ஆதரவு கோரி விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு விஜய் கடிதம் எழுதியிருந்தார்.. எனினும் விஜய்க்கு ஆதரவளிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன.. மேலும் திமுக கூட்டணியில் தொடர்வதாகவும் அக்கட்சிகள் அறிவித்தன..

இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டாம் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.. தன்னை சந்தித்த திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியனிடம் ஸ்டாலின் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.. தற்போது அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் என ஸ்டாலின் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது..

RUPA

Next Post

தங்கம் விக்கிற விலையில் 1 பவுன் சாத்தியமா..? விஜயின் தேர்தல் வாக்குறுதி.. நடைமுறை சிக்கல்கள் குறித்து தராசு ஷ்யாம் கேள்வி!

Thu May 7 , 2026
Is 1 pound possible at the selling price of gold? Vijay's election promise.. Tarasu Shyam questions about the practical problems!
vijay gold 1

You May Like