இந்தியாவில் மிகவும் மாசுபட்ட நகரங்கள் எது தெரியுமா?

ஆசியாவில் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களில் 8 நகரங்கள் இந்தியாவில் இருந்து இடம்பெற்றுள்ளது. இதில் மிக முக்கியமான தகவல் என்ன என்றால் பட்டியலில் டெல்லி இல்லை என்பது ஆச்சர்யமான விஷயமாகவும் உள்ளது.

ஆசிய அளவில் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குளிர்காலத்தின் தொடக்கத்தில் காற்று மாசு அதிக அளவில் இருக்கும். மாசு அளவு அபாயகரமான அளவு குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பல பகுதிகளில் அடர்த்தியான புகை மற்றும் சுவாசிக்க முடியாத அளவில் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது.

உலக காற்று தரக்குறியீட்டில் சமீபத்திய தரவுகளின்படி ஆசியாவின் முதல் 10 மோசமான காற்று தர நிலையங்களின் பட்டியலில் இந்தியாவின் எட்டு இடங்கள் உள்ளன. இந்தியாவில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ராஜமகேந்திரவரம் தரமான காற்று நிலையங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காற்று மாசுபாட்டில் குர்கிராம் முதலிடத்தில் உள்ளது. ரேவாரி , மசாபர் பூர் , தருஹேரா நகரம் , டால்கேட்டர் , லக்னே , ஆனந்தபூர் , பெகுசராய் , போபால் சௌராஹா , தேவாஸ் ,கடக்பாடா, கல்யாண் , தர்ஷன் நகர் , சாப்ரா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அதிர்ஷ்டவசமாக டெல்லி இந்த பட்டியலில் இடம்பிடிக்கவில்லை. டெல்லியில் அதிக காற்று மாசுபாடு ஏற்பட்ட ஒரு நகரம். ஆனால் தற்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எடுத்துள்ள நடவடிக்கையால் கட்டுப்பாட்டில் உள்ளது.

சீனாவின் லுஜோவில் உள்ள சியாவோஷிஷாங் துறைமுகம் மற்றும் மங்கோலியாவின் உலான்பாதரில் உள்ள பயான்கோஷுவும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

காற்றின் தரம் 0 முதல் 50க்கு உள்பட்டு மதிப்பிடப்பட்டால் அது தரமான காற்று உடையது 101 முதல் 150க்கு இடையில் உணர்திறன் கொண்டிருநு்தால் ஆரோக்கியமற்றது . 200 வரை இருந்தால் ஆரோக்கியமற்றது, 300க்கு மேல் இருந்தால் மிகவும் அபாயகரமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

2007ல் உலக காற்று தரக் குறியீடு திட்டம் தொடங்கப்பட்டது குடி மக்களுக்கு காற்ற மாசுபாடு பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிப்பதையும் , ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் உலகளாவிய காற்றின் தரத் தகவலை வழங்குவதையும்ட நோக்கமாகக் கொண்டுள்ளது.
குளிர்காலங்களில் காற்றின் மாசுபாடு அதிகரிக்கின்றன .. ஏனெனில் குளிர்ந்த காற்று பூமியின் மேற்பரப்பில் மாசுபாடுகளை சிக்க வைக்க முனைகின்றது. இதன் காரணமாக குளிர்காலத்தில் மாசு அளவு அதிகரிக்கின்றது.
குப்பைகளை எரிப்பது, பட்டாசு வெடிப்பது, போன்ற செயல்கள் அதிகரிப்பதால் காற்று மாசுபாடு அபாயகரமான அளவை எட்டியுள்ளத. நவம்பர் போன்ற குளிர்ந்த காலங்களில் வளிமண்டல நிலைகள் தலைகீழாக மாறும் போது குளிர்ந்த காற்றுக்கு மேலே சூடான காற்று செங்குத்தாக காற்று கலப்பதை தடுக்கின்றது. குளிர்ந்த காற்று மேற்பரப்புக்கு அருகில் உள்ள மாசுக்களை பொறிக்கின்றத. இதனால் மாசு அளவுகள் அதிகரிக்கின்றது.

Next Post

பொது வைப்பு நிதி , தேசிய ஓய்வூதியதிட்டத்தில் எது சிறந்தது?

Sun Oct 23 , 2022
பொது வருங்கால வைப்பு நிதி என்பது நீண்ட கால முதலீட்டு திட்டமாகும். அதே சமயம் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள் நீண்ட காலத்திற்கு இருந்தால் , அது நீண்ட கால முதலீடாக மாறுகின்றது. பொதுவாக, பி.பி.எப். முற்றிலும் ஆபத்து இல்லாத முதலீட்டாகும். அதே நேரத்தில் தேசிய ஓய்வூதிய அமைப்பு சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது.எனவே என்பிஎஸ் என்னும் தேசிய ஓய்வூதிய திட்டம் 100 சதவீதம் ஆபத்து இல்லாதது அல்ல. நிபுணர்களின் கூற்றுப்படி, ஒருவரின் ரிஸ்க் […]

You May Like