உலகிலேயே நம்பர் 1 சக்திவாய்ந்த பாஸ்போர்ட் எது தெரியுமா?. இந்தியா எந்த இடத்தில் உள்ளது?. புதிய பட்டியல் வெளியீடு!

World Strongest Passports 30kb

சர்வதேச அளவில் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் 2026 ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை ‘ஆர்டன் கேப்பிட்டல்’ (Arton Capital) நிறுவனம் வெளியிட்டுள்ளது. எந்தவொரு நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் உரிய விசா முன் அனுமதியின்றி அல்லது எளிதான முறையில் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய முடிகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.


இந்தப் புதிய பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) 182 மொபிலிட்டி ஸ்கோர் பெற்று உலகிலேயே மிக சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. அமீரக பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 138 நாடுகளுக்கு விசா இன்றியும், மற்ற நாடுகளுக்கு வந்திறங்கும் விசா (Visa on Arrival) போன்ற எளிதான முறைகளிலும் பயணம் செய்ய முடியும்.

சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் 175 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. ஸ்பெயின் நாடு 174 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. அமெரிக்கா 167 புள்ளிகளுடன் 10வது இடத்திற்குப் பின்வாங்கியுள்ளது; அமெரிக்க குடிமக்கள் 121 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.

இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

இந்தியா 70 மொபிலிட்டி ஸ்கோர் பெற்று 72 வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 30 நாடுகளுக்கு விசா இல்லாமலும், 40 நாடுகளுக்கு வந்திறங்கும் விசா வசதியுடனும் பயணம் செய்ய முடியும். மீதமுள்ள 128 நாடுகளுக்குச் செல்வதற்குப் பயணத்திற்கு முன்பே முறையான விசா பெறுவது அவசியமாகும்.

மற்றொரு புகழ்பெற்ற பட்டியலான ‘ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ்’ தரவரிசையில் இந்தியா 82வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பயணிகள் தாங்கள் செல்லும் நாட்டின் தூதரக இணையதளத்தில் தற்போதைய விசா விதிகளை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்வது பயணங்களை எளிதாக்கும்.

1newsnationuser5

Next Post

ரேஷன் பாமாயில் டெண்டர் கேன்சல்!. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?அதிர்ச்சியில் தமிழக அரசு!.

Thu Oct 15 , 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் வழியாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காகத் திட்டமிடப்பட்ட பாமாயில் டெண்டர் ஒதுக்கீட்டு நடவடிக்கைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தமிழக அரசு சார்பில் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்பின் அடிப்படையில், சுமாராக 600 லட்சம் பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டது. இதில் தகுதியான நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் 8 அன்று நான்கு நிறுவனங்களுக்குப் பணிகள் […]
palm oil 30kb

You May Like