‘அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு இருக்கணுமா’..? வெறும் ரூ.100 இருந்தால் போதும்..!! ஊட்டியை சுற்றிப் பார்க்கலாம்..!!

கோடை காலத்தில் செல்வதற்கென தமிழ்நாட்டிலும்,கேரளா, கர்நாடகாவிலும் பல சுற்றுலா தலங்கள் உள்ளன. உதாரணத்திற்கு தமிழ்நாட்டின் மலை பிரதேசங்களான சேலத்தின் ஏற்காடு, திருநெல்வேலியின் மாஞ்சோலை, நீலகிரியின் ஊட்டி, திண்டுகல்லின் கொடைக்கானல், தேனியின் தென்மலை என பிரபலமான பல இடங்கள் உள்ளன. கேரளாவில் வயநாடு, மூணாறு போன்ற இடங்களுக்கும் சுற்றுலா பயணிகள் அதிகம் செல்ல விரும்புவார்கள். மலைகளின் அரசி என அழைக்கப்படும் உதகையில் கோடை கால சீசன் தற்போதே தொடங்கி உள்ளது.

இதனால், உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனை அடுத்து உதகை படகு இல்லம், ரோஜா பூங்கா, அரசு தாவரவியல் பூங்கா, தேயிலை அருங்காட்சியகம் மற்றும் தொட்டபெட்டா மலை சிகரம் போன்ற முக்கிய சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வர சுற்றுலா பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இந்த சேவையை தொடங்கி வைத்தார்.

முதற்காட்டமாக இந்த சுற்றுலா பேருந்துகள் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் காலை முதல் மாலை வரை சுழற்சி முறையில் தொடர்ந்து இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்துகள் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து படகு இல்லம், ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா, தேயிலை அருங்காட்சியகம், தொட்டபெட்டா மலை சிகரம் வரை இயக்கப்பட உள்ளது. இந்த சுற்றுலா பேருந்தில் பெரியோர்கள் 100 ரூபாய், சிறியவர்கள் 50 ரூபாயும் கட்டணமாக செலுத்தி ஒரு முறை டிக்கெட் எடுத்து மாலை வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : Gold | அடடே..!! இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..? தங்கம் விலையை எப்படி நிர்ணயம் செய்கிறார்கள்..?

Chella

Next Post

ரயில் பயணிகளே..!! இந்த நம்பரை கட்டாயம் நோட் பண்ணி வைங்க..!! தவறி விழுந்த செல்போனை ஈசியா மீட்கலாம்..!!

Fri Apr 12 , 2024
இன்றைய நவீன உலகத்தில் அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட்போன் இருக்கிறது. ஒரு கம்ப்யூட்டரை போல பல தகவல்களை இதில் சேமித்து வைக்க முடியும் என்பதால் அலுவல் ரீதியான சில ஆவணங்கள் தொடங்கி தனிப்பட்ட விஷயங்கள் வரை பல தரவுகளை செல்போனில்தான் நாம் சேமித்து வைத்திருக்கிறோம். செல்போன் திருடுபோனாலோ அல்லது தவறவிட்டு விட்டாலோ அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். பலர் ரயில் பயணத்தின் போது ஜன்னல் அல்லது படியின் அருகே செல்போனை பயன்படுத்தியபடி […]

You May Like