சூப்பர் அறிவிப்பு..!உங்க ரேஷன் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா…? இன்று 10 மணி முதல் முகாம்…!

ration 2025

ஜூலை மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் இன்று நடைபெற உள்ளது.


சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் சென்னையை பொறுத்தவரை மண்டல அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் இரண்டாம் சனிக்கிழமை நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் இன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம். கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் அங்கீகாரச்சான்று உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: அதிர்ச்சி…! திருப்புவனம் அஜித் போல் மற்றொரு சம்பவம்…! அண்ணாமலை எழுப்பும் சந்தேகம்…!

Vignesh

Next Post

குட்நியூஸ்!. 5 கி.மீ. தொலைவில் பள்ளி இருந்தால் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படும்!. அரசு அதிரடி அறிவிப்பு!

Sat Jul 12 , 2025
கல்வி அணுகலை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக , உத்தரபிரதேச அரசு, பள்ளிகளிலிருந்து குறைந்தது ஐந்து கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6000 பயணப்படி வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி, பந்தேல்கண்ட் மற்றும் தொலைதூர சோன்பத்ராவின் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயணச் சிரமங்களை எதிர்கொள்ளாமல் தங்கள் அரசு மேல்நிலைப் பள்ளிகளை அடைய உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஜான்சி, சித்ரகூட், ஜலான், ஹமிர்பூர், […]
up govt school students 6000 11zon

You May Like