வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சி அதிகரிக்குமா…..?

இன்றளவும், நாம் ஏதாவது உடல் உபாதைகள் என்று மருத்துவர்களிடம் சென்றால், அவர்கள் சொல்லும் எளிதான தீர்வு தண்ணீர்.

நம் உடலில் ஏற்படும் பல்வேறு உபாதைகளை நீக்குவதற்காக மருத்துவர்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க சொல்வார்கள். அந்த அளவிற்கு தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில், காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், செரிமான மண்டலம் மேம்படும். அதோடு பசி நன்றாக எடுக்கும் ஆகவே உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது. உடலில் இருக்கும் தேவையற்ற அழுக்குகள் நீங்கும் என்றும் சொல்லப்படுகிறது.

ஒருவருக்கு மூச்சுத் திணறல் பிரச்சனை மற்றும் நுரையீரலில் பிரச்சினையை போன்றவை இருந்தால், நாள்தோறும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நன்மை தரும் என்று கூறப்படுகிறது. அதேபோல வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும், ஆக்சிஜனை மெது மெதுவாக உள்ளிழுப்பதற்கும் உதவி புரிகிறது. அதேபோல அதிகாலை வேளையில், தண்ணீர் குடிப்பது, உடலுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தி, உடல் சோர்வை நீக்கும் என்று சொல்லப்படுகிறது.

அதேபோல, நீர் சத்து அதிகரிப்பதால், தலைவலி போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது மிகச் சிறந்த தீர்வாக இருக்கும். குடல்புண் உள்ளிட்ட வயிற்றுப் பிரச்சனை இருப்பவர்கள் தண்ணீர் குடிப்பதால், பல்வேறு உடல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும். தேவையில்லாத கழிவுகள் உடலில் தேங்கி இருப்பதன் காரணமாகத்தான், உடல் எடை அதிகரிக்கும் அப்படி உடல் எடை அதிகரித்து இருப்பவர்கள், வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், அந்த நச்சுக்கள் வெளியேறி உடல் எடையை குறைக்க வெகுவாக உதவி புரியும் என்று கூறப்படுகிறது.

அத்துடன் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்கவும், இந்த தண்ணீர் பருகும் பழக்கம் உதவி புரிகிறது. அதோடு, தண்ணீர் உடலில் இருக்கக்கூடிய மெட்டபாலிசத்தை அதிகரிப்பதன் காரணமாக, நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கிறது.

Next Post

காலாண்டுத் தேர்வு விடுமுறையில் ஏழு நாட்கள் இது கட்டாயம்...! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு...!

Sat Sep 23 , 2023
இந்த கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வு, செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 11, 12 ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதி தேர்வு தொடங்கியது, 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 18 ஆம் தேதியும் காலாண்டு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 27-ஆம் தேதி தேர்வுகள் நிறைவடைந்த பின், 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை […]

You May Like