Dragon Fruit Benefits | இதய ஆரோக்கியம் முதல் உடல் எடை குறைப்பு வரை..!! இந்த ஒரு பழம் போதும்..?

dragon 1

Dragon Fruit Benefits | தென் மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட டிராகன் பழம் (Dragon Fruit), 19-ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுக்காரர்கள் மூலம் வியட்நாமுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, இன்று இந்தியா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட வெப்பமண்டல நாடுகளில் பரவலாகப் பயிரிடப்படுகிறது. மெக்சிகோ பூர்வகுடி மக்களால் ‘பிடாயா’ (Pitaya) என அழைக்கப்பட்ட இப்பழம், தனித்துவமான வடிவமும் சுவையும் கொண்டு தற்போது தமிழகத்திலும் வெற்றிகரமாக விளைவிக்கப்படுகிறது. கள்ளி வகையைச் (Cactus) சேர்ந்த இச்செடி 10 முதல் 20 அடி வரை வளரக்கூடியது; இதற்கு மிகக் குறைந்த அளவே தண்ணீர் போதுமானது என்றாலும், வேர்ப்பகுதியில் தண்ணீர் தேங்கினால் செடி அழுகிவிடும் என்பதால் வடிகால் வசதி மிகவும் அவசியமாகும். மேலும், பூச்சித் தாக்குதல் இல்லாததால் இதற்குப் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தேவையும் இருப்பதில்லை.


சாகுபடியைப் பொறுத்தவரை, 4 முதல் 5 ஆண்டுகள் நன்கு முதிர்ந்த செடிகளிலிருந்து வெட்டியெடுக்கப்படும் தண்டுப் பகுதிகளை நடுவதன் மூலம் ஒரே ஆண்டிலேயே பூத்து பலன் பெற முடியும். கல் தூண்கள் அல்லது மூங்கில் கழிகளின் ஆதரவோடு படரவிடப்படும் இச்செடிகளை முறையாகக் கவாத்து (Pruning) செய்து வளர்த்தால் பக்கக் கிளைகள் பரந்து விரிந்து அதிக மகசூலைக் கொடுக்கும். ஆண்டுதோறும் மே மாதம் முதல் அடுத்த 6 மாதங்கள் வரை காய்க்கும் டிராகன் பழங்கள் ஒவ்வொன்றும் சராசரியாக 250 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட எடையுடன் கிடைக்கின்றன. இளஞ்சிவப்பு அல்லது மஞ்சள் நிறத் தோலுடன், உள்ளே வெள்ளை, சிவப்பு, மஞ்சள் அல்லது ஊதா நிறச் சதையுடனும் சிறிய கரும்புள்ளிகள் போன்ற விதைகளுடனும் பல வகைகளில் இப்பழங்கள் விளைகின்றன.

டிராகன் பழத்தில் மனித உடலுக்குத் தேவையான அபரிமிதமான மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்து செரிமானத்தைச் சீராக்கி மலச்சிக்கலைப் போக்குவதோடு, பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கத் துடிக்கிறவர்களுக்கு மிகச் சிறந்த தேர்வாக அமைகிறது. மேலும், வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன; பழத்தின் விதைகளில் உள்ள ஒமேகா சத்து மற்றும் குறைந்த கொழுப்பு இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றன. அத்துடன் இதிலுள்ள கால்சியம் எலும்புகளை வலுப்படுத்த உதவுவதால், டிராகன் பழம் சுவை மட்டுமின்றி முழுமையான உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்ற சிறந்த இயற்கை உணவாகத் திகழ்கிறது.

Read More : BREAKING | என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்துவிட்டேன்..!! ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் மெஸ்ஸி..!!

Next Post

'போலி' பனீர் உள்ளிட்ட செயற்கை பால் உணவுகளுக்கு தடை!. மீறினால் உணவகங்கள் நீக்கப்படும்!. Zomato அதிரடி!

Tue Sep 1 , 2026
உணவு விநியோக தளமான சோமேட்டோ (Zomato), தனது தளத்தில் போலி பனீர் மற்றும் செயற்கை சீஸ் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுகளை விற்கும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. அதாவது, பால் அல்லாத, தாவர எண்ணெய் மற்றும் கெமிக்கல் கலவைகளால் தயாரிக்கப்படும் ‘அனலாக்’ (Analogue) பால் பொருட்களுக்கு சோமேட்டோ “முழுமையான தடை ” (Zero-tolerance) கொள்கையை அறிவித்துள்ளது. இதுபோன்ற உணவுகளை விற்கும் உணவகங்கள் தளத்தில் இருந்து உடனடியாக […]
Zomato Fake paneer 30kb

You May Like