Ration கடை இயங்கும் நாட்களில் அதிரடி மாற்றம்..!! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!! விரைவில் வெளியாகும் அறிவிப்பு..?

ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்த ஆலோசனை ஒன்று தமிழ்நாடு அரசு தரப்பில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதனால், லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து பயன்பெற்று வருகின்றனர். இதற்கிடையே ரேஷன் கடை ஊழியர்களின் பணிகள் அபரிமிதமானது. பண்டிகை காலங்களை கணக்கில் கொண்டு, பொங்கல் பரிசு தொகுப்பு உள்ளிட்ட பணிகளுக்காக கூடுதல் பணிகளையும் இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் ரேஷன் கடைகளை விடுமுறையின்றி திறந்து வைத்திருக்க வேண்டியுள்ளது. வேலைநாட்களுக்கு பதிலாக, வேறு நாட்களில் அந்த விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு ஈடுகட்டப்படுகின்றன. ரேஷன் கடைகளின் நேரம் கிராமப்புறங்களில் ஒரு மாதிரியும், நகர்புறங்களில் வேறு மாதிரியும் இருக்கும். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் தங்களும் விடுமுறை வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் நீண்ட காலமாகவே கோரிக்கையை வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை அரசு தற்போது பரிசீலித்து வருவதாக தெரிகிறது.

ஞாயிறுதோறும் விடுமுறை திட்டத்தை செயல்படுத்தும் சாத்தியக்கூறு குறித்து, ஊழியர்கள் மற்றும் கார்டுதாரர்களுடன் ஆலோசிக்க அரசு முடிவு செய்கிறதாம். இதுவரை முடிவெடுக்கப்படவில்லை என்பதால், இதுதொடர்பாக ரேஷன் கார்டுதாரர்கள், கடை ஊழியர்கள் உடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க உணவு மற்றும் கூட்டுறவு துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனாலும், ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டுமே லீவு கிடைக்கும்போது, எப்படி ரேஷன் பொருட்களை வாங்குவார்கள்? என்றும் அலுவலகம் செல்பவர்கள் கேட்கிறார்கள்?

English Summary : Tamilnadu government advice on Sunday holiday for ration shop employees

Read More : இனி ஆர்டிஓ அலுவலகங்களில் ‘Driving Licence’ கிடைக்காது..!! எங்கு வாங்க வேண்டும்..? வெளியான அறிவிப்பு..!!

Chella

Next Post

Kilambakkam | இனி ரூ.40 இருந்தால் போதும்..!! கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! புதிய வசதி அறிமுகம்..!!

Fri Mar 1 , 2024
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்குள் எங்கு வேண்டுமானாலும் செல்வதற்கு ரூ.40 டிக்கெட் வசதியை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு தெற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டு இப்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இம்முனையத்தில் புறநகர் பேருந்துகளுக்காக 28.25 ஏக்கர் பரப்பளவில் 226 புறநகர் பேருந்துகள், […]

You May Like