துருக்கியை மீண்டும் துடிதுடிக்க வைத்த நிலநடுக்கம்..!! பலி எண்ணிக்கை 34,000..!! மீட்புப் பணி தீவிரம்..!!

துருக்கி நிலநடுக்கத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட காஹ்ராமன் நகரம் அருகே மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியை உள்ளது.

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் கடந்த 6ஆம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கமானது 18 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் மையம் தெரிவித்துள்ளது. அதைதொடர்ந்து 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 34,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலி எண்ணிக்கை 50,000 வரை அதிகரிக்கும் என அமெரிக்க மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், துருக்கியின் காஹ்ராமன்மராஸ் நகரில் இருந்து தென்கிழக்கே 24 கி.மீ. தொலைவில் நேற்று நள்ளிரவு 12.03 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கம் 15.7 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நகரம் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. இந்நிலையில், மீண்டும் அதே நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், அந்த பகுதி மக்கள், மீட்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபட்டோர் அதிர்ச்சி அடைந்தனர்.

Chella

Next Post

”உங்க ஃபோனுக்கு இந்த நிலைமை வந்துச்சுன்னா இனி இப்படி பண்ணி பாருங்க”..!! சூப்பரான டிப்ஸ்..!!

Mon Feb 13 , 2023
உங்கள் ஸ்மார்ட்போனின் Pattern lock அல்லது Pin நம்பரை மறந்துவிட்டீர்களா..? இனி கவலை வேண்டாம்.. இதுகுறித்து இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்… உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டால் Android Device Manager உங்களுக்காக வேலை செய்யும். உங்கள் ஸ்மார்ட்போனில் Google கணக்கை லாகின் செய்திருந்தால், அதன் உதவியுடன் உங்கள் Android Device Manager-ஐ நிர்வகிக்கலாம். அப்போது திரையில் காட்டப்படும் ‘Lock’ பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு புதிய பாஸ்வார்டை வழங்குவதற்கான […]

You May Like