Edappadi Palaniswami A mysterious person entered the house of Edappadi Palaniswami..!! Sensational incident on Greenway..!!

பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்குள் திடீரென மர்ம நபர் ஒருவர் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edappadi Palaniswami | அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமாக இருப்பவர் எடப்பாடி பழனிசாமி. சேலம் மாவட்டம் எடப்பாடியில் இவர் வசித்து வந்தாலும், சென்னையிலும் இவருக்குப் பசுமை வழிச்சாலையில் வீடு இருக்கிறது. சென்னைக்கு வரும் போதெல்லாம் இங்கே தான் அவர் தங்குவார். மேலும், அதிகாரப்பூர்வ சந்திப்புகள் எல்லாம் இங்கு தான் நடக்கும் என்பதால் தினசரி பலர் எடப்பாடி பழனிசாமியை பார்க்க இந்த வீட்டிற்கு தான் வருவார்கள்.

இதற்கிடையே இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி வீட்டில் ஒரு பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது இன்று சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதில் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளச் சென்றிருந்தார். சட்டசபை நிகழ்வுகள் முடித்துக் கண்டு வழக்கம் போல அவர் தனது காரில் வீடு திரும்பினார். வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டு கார் உள்ளே நுழைந்த நிலையில், இதற்காகக் காத்திருந்த அந்த மர்ம நபர் வீட்டிற்குள் ஓடிச் சென்றுள்ளார்.

இதைப் பார்த்ததும் பதறி எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக சுதாரித்துக் கொண்டு அந்த மர்ம நபரை மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து அந்த மர்ம நபரை அபிராமபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் அவர் எதற்காக இப்படி திடீரென எடப்பாடி வீட்டிற்குள் நுழைய முயன்றார் என்பது குறித்த தகவல்கள் இதுவரை இல்லை. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Read More : https://1newsnation.com/bjp-annamalai-bjp-marginalizes-dmk-aiadmk-in-kongu-region-shocking-information-in-the-survey/

Chella

Next Post

Multiplex Theaters | தமிழ்நாட்டில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை மூடிவிடுவோம்..!! எச்சரிக்கும் உரிமையாளர்கள் சங்கம்..!!

Tue Feb 20 , 2024
ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சி பெற்று வருவதால், தியேட்டர்களை மூடப் போவதாக மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க பொதுக் குழுவில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். Multiplex Theaters | இதுகுறித்து தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து திருப்பூர் சுப்பிரமணியம் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், “தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் சினிமா மட்டுமே ஒளிபரப்பப்பட வேண்டிய நிலை இருக்கிறது. ஆனால், மற்ற மாநிலங்களில் […]

You May Like