Edappadi vs Udhayanidhi| “அப்போவே போயி சேர்ந்திருக்கனும்.. நைட் 2 மணிக்கு யாரு கால பிடிக்க..” – எல்லை மீறும் பேச்சுகள்..! பரபரப்பாகும் பரப்புரை!!

eps udhay 1

தமிழக சட்டசபை தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில தினங்களாக மற்ற கட்சியினரை விமர்சித்து பேசுவது பிரச்சாரத்தில் தலைதூக்கியுள்ளது. அந்த வகையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் வார்த்தை போர் அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளது.


முன்னதாக உதயநிதி பேசுகையில், “10 தோல்வி பழனிச்சாமி, இப்போது 11வது தோல்வி பழனிச்சாமியாக மாற போகிறார். பழனிச்சாமியை தோற்கடித்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும். பாஜகவின் அடிமையாக அவர் செயல்பட்டு வருகிறவதாக பல இடங்களில் குறிப்பிட்டு பேசியுள்ளார். மேலும் சசிகலாவின் காலில் விழுந்து தான் இபிஎஸ் முதலமைச்சார் ஆனார் எனக் கூறிய உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை மக்களிடையே காட்டினார்.

இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடலூர் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி உதயநிதியை விமர்சித்து பேசியுள்ளார். உதயநிதியின் அரசியல் வாழ்க்கையை விமர்சிக்கும் வகையில் “அவருடைய வயது தான் எனது அரசியல் அனுபவம்.. பால்டாயில் குடிச்சதெல்லாம் பஞ்ச் டயலாக் பேசுது, அப்போவே போய் இருக்கணும் மேலோகத்துக்கு, இருந்துட்டு நம்ம உயிரை வாங்குதுங்க” என்று தாக்கி பேசியுள்ளார்.

தொடர்ந்து, நான் காலில் விழுந்து பதவிக்கு வந்தேன் என கூறுனீங்களே.. நீங்கள் யாரு காலை பிடிக்க இரவு 2 மணிக்கு இன்ஸ்டாவில் ரீ-போஸ்ட் பண்ணுறீங்க. ஏற்கனவே காலை தேடி போயி தான் பால்டாயில் குடிச்சு தப்பிச்சிருக்கீங்க.. மீண்டும் எனக் கூறி நக்கலாக சிரித்தார். வடிவேலு நடித்த 27 ஆம் புலுக்கேசி படம் போல தான் ஸ்டாலின் அப்பாவும், உதயநிதி மகனும் தமிழகத்தை ஆட்சி செய்கிறார்கள். என் 56 ஆண்டு கால ஆட்சியில் நான் யாரையும் தரைகுறைவாக பேசியதில்லை.. ஆனால் இந்த கருணாநிதி குடும்பம் என்னை பேச வைக்கிறது என்றார்.

இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் வாக்குறுதிகளை அளிப்பதிலும், அரசியல் ரீதியான கருத்துக்களை முன்வைக்க படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனிப்பட்ட வாழ்க்கையை தாக்கி பேசுவது அரசியல் நாகரிகமாக இல்லை என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Subscribe to my YouTube Channel

Read more: “எனக்கு திருமணம் ஆகிவிட்டது.. ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள் உள்ளன..” த்ரிஷா பரபரப்பு பதிவு..!

Next Post

அல்லு அர்ஜுன் - அட்லீ கூட்டணியில் பிரம்மாண்ட படம்.. சர்பிரைஸ் அப்டேட் நாளை வெளியாகிறது..! படக்குழு அறிவிப்பு..!

Tue Apr 7 , 2026
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் அட்லீ.. இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லீ ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த அவர் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார். இந்த படங்களும் மிகப்பெரிய ஹிட்டானது.  இதை தொடர்ந்து பாலிவுட் […]
allu arjun atlee movie

You May Like