ஜெயலலிதாவால் அவமானப்படுத்தப்பட்ட விஜய்.. அன்று கடைசி வரிசை.. இன்று முதல்வர் இருக்கை..! 2013-ல் என்ன நடந்தது..?

vijay jayalalithaa 2026 05 33f8e819d5ca5b6c4edec459c8e419ad 1200x675 1

2013ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இந்திய சினிமா நூற்றாண்டு விழா, இன்று 2026 அரசியல் சூழலில் மீண்டும் பெரிய விவாதமாக மாறியுள்ளது. அந்த நிகழ்வில் நடிகர் விஜய் கலந்து கொண்டிருந்த போது அவருக்கு கடைசி வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது. அதே நேரத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முன்வரிசைகளில் அமர்ந்திருந்த நிலையில் விஜய் தனியாக அமர்ந்திருந்த காட்சி, அப்போது பேசுபொருளானது.


அந்த பிரம்மாண்ட நிகழ்வில் அன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் கலந்து கொண்டனர். திரைப்பட உலகின் பல முன்னணி முகங்களும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். அதில் நடிகர் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் முன்வரிசையில் அமர்ந்திருந்த நிலையில், விஜய் கடைசி வரிசையில் அமர்ந்திருந்தது பெருமளவில் பேசப்பட்டது.

அந்த காலகட்டத்தில் விஜயின் ‘தலைவா’ திரைப்படம் தொடர்பான சர்ச்சைகளும் நிலவியதால், இந்த நிகழ்வில் அவருக்கு வழங்கப்பட்ட இடம் குறித்து பல்வேறு அரசியல் மற்றும் திரையுலக விமர்சனங்கள் எழுந்தன. சிலர் இதை சாதாரண ஒழுங்கு ஏற்பாடு எனக் கூறினாலும், மற்றவர்கள் இதை நடிகர் ஒருவரின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் முயற்சி எனக் கூறினர். தமிழ்நாட்டில் நடிகர் அரசியலுக்கு வருவது புதியது அல்ல என்பதால், இந்த நிகழ்வு கூடுதல் கவனம் பெற்றது.

முன்னதாக நடிகர் எம் ஜி ஆர் எடுத்த அரசியல் வெற்றி இதற்கான பின்னணியாகவும் பேசப்பட்டது. இன்று 13 ஆண்டுகள் கடந்த நிலையில், அதே சென்னையின் மைதானத்தில் நடிகர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக நுழைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரிய சின்னமாக பார்க்கப்படுகிறது. ஒருகாலத்தில் கடைசி வரிசையில் அமர்ந்தவர், இன்று அதே இடத்தில் முதலமைச்சராக பதவி ஏற்கிறார். “இதுதான் காலத்தின் மாற்றம்” என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த மாற்றம் தொடர்பாக அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைக்கின்றனர். சிலர் இதை ஒரு நீண்ட அரசியல் பயணத்தின் இயல்பான வளர்ச்சி எனக் கூற, மற்றவர்கள் இது தமிழ்நாட்டு அரசியலில் நட்சத்திரங்களின் தாக்கம் தொடர்ந்து நீடிப்பதை காட்டும் ஒரு எடுத்துக்காட்டு எனவும் விவரிக்கின்றனர். மொத்தத்தில், 2013ஆம் ஆண்டின் நடந்த அந்த ஒரு நிகழ்வு 2026ஆம் ஆண்டில் அரசியல் வரலாற்றின் முக்கிய சகாப்தமாக மாறியுள்ளது.

அவமானங்கள் அரசியல் மறுபிரவேசங்களுக்கு உந்துசக்தியாக அமைந்த வரலாறு தமிழ்நாட்டிற்கு உள்ளதா?

இதற்கு மிக நெருக்கமான உதாரணம் ஜெயலலிதாவே. 1989-ல், திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வன்முறைக் கலவரத்தின் போது, ​​தமிழ்நாடு சட்டமன்றத்திற்குள் ஜெயலலிதா தாக்கப்பட்டு அவரது சேலையும் தலைமுடியும் பிடித்து இழுக்கப்பட்டன.

கண்ணீருடன் வெளியேறிய அவர், தன்னை மகாபாரதத்தின் திரௌபதியுடன் ஒப்பிட்டு, முதலமைச்சராகத் தவிர வேறு எந்த வகையிலும் சட்டமன்றத்திற்குத் திரும்ப மாட்டேன் என்று சபதம் செய்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் 1991 தேர்தலில் வெற்றி பெற்று, அந்த சபதத்தைக் காப்பாற்றினார்.

Read more: வெள்ளத்தின் போது கோட்–சூட் அணிந்து தான் முதல்வர் விஜய் களத்திற்கு வருவாரா..? அண்ணாமலை விமர்சனம்..!

English Summary

Vijay was humiliated by Jayalalithaa.. Last row that day.. Today is the Chief Minister’s seat..! What happened in 2013..?

Next Post

BREAKING| 717 மதுபான கடைகளை 2 வாரங்களுக்குள் மூட உத்தரவு..! - முதலமைச்சர் விஜய் அதிரடி..

Tue May 12 , 2026
717 liquor shops ordered to close within 2 weeks..! - Chief Minister Vijay takes action..
cm vijay 2

You May Like