தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் தேர்தல் கமிஷன் கெடுபிடி..!! பின்பற்ற தவறினால் சிறை..!! வெளியான முக்கிய எச்சரிக்கை..!!

tn election campaign

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கான அனல் பறக்கும் இடைத்தேர்தல் பிரசாரம் இன்று (அக். 4) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.


இதனைத் தொடர்ந்து, 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 126-இன் கீழ் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. அதன்படி பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்தவோ, பங்கேற்கவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி, வானொலி, வாட்ஸ்ஆப், முகநூல், எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், எஸ்.எம்.எஸ். மற்றும் இணையம் வழியாக தேர்தல் தொடர்பான எந்தவொரு பிரசாரத்தையும் முன்னெடுக்கக் கூடாது.

கேளிக்கை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் மூலம் மக்களை கவரும் பிரசாரங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

அதேபோல, தொகுதியின் வாக்காளர்கள் அல்லாத வெளிநபர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள் மற்றும் விருந்தினர் இல்லங்களில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நட்சத்திரப் பேச்சாளர்களுக்கான வாகன அனுமதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்களை வாகனங்களில் அழைத்து வருவது தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்விரு தொகுதிகளிலும் வரும் அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

Read More : தாய்மாமன் தங்க மோதிரம் எங்கே? செவிலியரை மண்வெட்டியால் கொடூரமாக தாக்கிய வாலிபர்..!! கும்பகோணத்தில் அதிர்ச்சி..!!

Next Post

அரிசி விலை கிடுகிடு உயர்வு! மூட்டைக்கு ரூ.500 வரை எகிறியது! கிலோ ரூ.100-ஐ தொடும் அபாயம்!

Sun Oct 4 , 2026
பருவமழை பற்றாக்குறை, வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி மற்றும் வெளிமாநில வரத்து குறைவு காரணமாக தமிழகத்தில் சன்ன ரக அரிசியின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த ஜனவரியில் ரூ.1,350 வரை விற்கப்பட்ட 26 கிலோ எடைகொண்ட சன்ன ரக அரிசி மூட்டை, தற்போது சில்லறை விற்பனையில் பிராண்டுகளுக்கு ஏற்ப ரூ.1,800 முதல் ரூ.2,250 வரை விற்கப்படுகிறது. கிலோவுக்கு ரூ.3 வரை மொத்த விலையில் கூடியுள்ளதால், பண்டிகை காலத்தில் குடும்ப பட்ஜெட் எகிறி […]
most expensive rice

You May Like