சென்னையில் இன்று முதல் மின்சார பேருந்துகள்…! தமிழக அரசு அறிவிப்பு…!

EC bus 2025

சென்னையில் இன்று முதல் மின்சார பேருந்துகள் முழுவீச்சில் இயக்கப்பட உள்ளன என தமிழக அரசு கூறியுள்ளது.


சென்னை மாநகரில் தற்போது டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சார பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில், 5 பணிமனைகளின் மூலம் 625 மின்சாரப் பேருந்துகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மின்சாரப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கென 6 இருக்கைகள் தனியாக அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் ஏறுவதற்கு வசதியாக தரை வரை கீழிறங்கும் வகையில் பட்டிக்கட்டு அமைப்புகளுடன் பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. பேருந்தின் ஒவ்வொரு இருக்கைக்கு கீழுவும் கைப்பேசி மின்னேற்றம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு இருக்கைக்கும் சீட்டு பெல்ட் அமைக்கப் பட்டுள்ளது. மின்சாரப் பேருந்து முழுவதும் 7 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, மழைக்காலத்தில் பேருந்துக்குள் தண்ணீர் செல்லாத வகையில் பேருந்தின் உயரத்தை உயர்த்துவதற்கு தனியாக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.தானியங்கி பேருந்து நிறுத்த அறிவிப்பு, ஜி.பி.எஸ். வழியாகச் செயல்படும் சிக்னல் அமைப்பு, பெரிய எல்.இ.டி திரைகள், தமிழ், ஆங்கிலத்தில் வழித்தட அறிவிப்பு போன்ற வசதிகளும் மின்சாரப் பேருந்தில் இடம்பெற்றுள்ளன.

Read more: 50 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாள்!. அவசர நிலை பிரகடனத்தை எதிர்கொண்ட இந்தியா!. இருளில் மூழ்கிய தேசம்!. பின்னணி இதோ!

Vignesh

Next Post

ஒரு நாளைக்கு ரூ.5.17 கோடியா?. ரொனால்டோவை ரூ.5,300 கோடிக்கு ஒப்பந்தம் செய்த அணி!. உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர் இவர்தான்!.

Mon Jun 30 , 2025
போர்ச்சுகீசிய சூப்பர் ஸ்டார் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவூதி ப்ரோ லீக் கிளப்பான அல்நஸ்ர் உடன் தனது ஒப்பந்தத்தை இரண்டு ஆண்டுகள் மேலும் நீட்டித்துள்ளார். கடந்த பல வாரங்களாக அவரின் எதிர்காலத்தைச் சுற்றியுள்ள வதந்திகளுக்கு இதன்மூலம் முடிவு கிடைத்துள்ளது. இதனால் 42 வயது வரை கால்பந்து விளையாடி இன்னும் பல்வேறு சாதனைகள் படைக்க இருக்கிறார். வெயிலில் நனைந்த கடற்கரையோரத்தில் ரொனால்டோ நடந்து சென்று “அல்நாசர்ஃபாரெவர்” என்று அறிவிப்பது போன்ற […]
Cristiano Ronaldo 11zon

You May Like