Lok Sabha: பாஜக-விற்கு சப்போர்ட் செய்கிறாரா எடப்பாடி பழனிச்சாமி.? ராமநாதபுரம் வேட்பாளர் தேர்வில் சலசலப்பு.!!

Lok Sabha: 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் பாஜக-விற்கு எடப்பாடி பழனிச்சாமி மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கிறார் என குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

2024 ஆம் வருடம் பாராளுமன்றத் தேர்தல்(Lok Sabha) வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும் நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.

கடந்த தேர்தல்களில் அதிமுக மற்றும் பாஜக இரண்டு கட்சிகளும் ஒரே கூட்டணியில் பயணித்தன. 2024 ஆம் வருட தேர்தல் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பு பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். மேலும் அந்தக் கட்சியுடன் எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன் எனவும் வெளிப்படையாக தெரிவித்து வந்தார். எனினும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க எடுத்து அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் தங்கள் தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்க தொடங்கின. அதன்படி பாஜகவுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பாமக தேசிய ஜனநாயக கட்சி உன்னிடம் பல கட்சிகள் கூட்டணிக்காக இணைந்திருக்கிறது. மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் நினைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு இடையே ரகசிய உறவு இருந்து வருவதாகவும் சிலர் நீண்ட நாட்களாகவே தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ராமநாதபுரத்தில் அதிமுக வேட்பாளரை அறிவித்த நிகழ்வு அவரது கட்சிக்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அனுபவம் மிகுந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகளை விட்டுவிட்டு வேறு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை இராமநாதபுரம் வேட்பாளராக அறிவித்திருப்பது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வர இருக்கின்ற பொதுத் தேர்தலில் ராமநாதபுரத்தின் வேட்பாளராக அதிமுகவை சார்ந்த ஜெயபெருமாள் என்பவரை அறிவித்துள்ளார் இவர் விருதுநகரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களிடையே பிரபலமான பல அதிமுக முக்கிய நிர்வாகிகள் இருக்கும்போது வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரை பாராளுமன்ற வேட்பாளராக களம் இறக்கி இருப்பது எடப்பாடி பழனிச்சாமியின் மீதான சர்ச்சையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

2014 ஆம் வருடம் அதிமுக சார்பில் போட்டியிட்ட அன்வர் ராஜா ராமநாதபுரத்தில் இருந்து வெற்றி பெற்றார். இது போன்ற மூத்த தலைவர்கள் இருந்தும் பாஜகவிற்காக ராமநாதபுரம் தொகுதியை எடப்பாடி பழனிச்சாமி விட்டுக் கொடுக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. தற்போது புதுமுக வேட்பாளரை அறிமுகப்படுத்தி இருப்பதால் வாக்கு வங்கியிலும் சரிவு ஏற்படலாம் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதன் மூலம் பாரதிய ஜனதா கட்சியை இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி மறைமுகமாக வேலை பார்க்கிறாரா என்ற சந்தேகமும் எழுவதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

Read More: 3வது மாடி எஸ்கலேட்டரில் ஏறும்போது, தந்தை கையில் இருந்து தவறி விழுந்த ஒரு வயது குழந்தை…! நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி.!

Next Post

வார்னிங்.! ZOOM பயனர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பாதுகாப்பு எச்சரிக்கை.!! மத்திய அரசு வெளியிட்ட தகவல்.!!

Wed Mar 20 , 2024
ZOOM செயலியை பயன்படுத்துபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசின் CERT எச்சரிக்கை தகவலை பகிர்ந்து உள்ளது. ZOOM என்பது தொழில் முறை தகவல் தொடர்பிற்கு பயன்படுத்தப்படும் ஒரு செயலியாகும். தொலைதூரத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது சகா பணியாளர்கள் மற்றும் குழுக்களுடன் வீடியோ மற்றும் ஆடியோ கான்பரன்சிங் செய்வதற்கு இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். உங்கள் அலுவலக பணி தொடர்பாக நீங்கள் அதிக முறை ZOOM பயன்படுத்துகிறீர்கள் […]

You May Like