கரூர் கோடங்கிப்பட்டியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவின் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.. அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள், திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் என முப்பெரும் விழா கொண்டாட்டம் நடைபெற்றது..
இந்த விழாவில் பேருரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் “ இந்தியாவில் ஆயிரக்கணக்கான கட்சிகள் இருந்தாலும் திமுக தொண்டர்களை போல் கொள்கை உணர்வு கொண்ட தொண்டர்கள் வேறு எந்த கட்சியிலும் இல்லை.. தமிழ்நாட்டின் நலனுக்காக உண்மையாக உழைப்பவர்கள் நாம்.. உங்களை போன்ற உண்மையான உடன்பிறப்புகள் இருக்கும் வரை எந்தக் கொம்பனாலும் திமுகவை தோற்கடிக்க முடியாது.. உங்களுக்கு தலைமை தொண்டனாக இருப்பது நான் பெற்ற பெரும் பேறு..
தமிழ்நாட்டை காக்கும் காவல் அரண் திமுக மட்டும் தான். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறு செய்வது காவிக் கொள்கை.. 2000 ஆண்டுகளாக அந்த கொள்கைக்கு எதிரா இந்த இயக்கம் போராடி வருகிறது.. அந்த கொள்கையின் அரசியல் முகம் பாஜக.. ஒன்றியத்தில் இருக்கும் பாஜக அரசுடன் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.. 2 நாட்களுக்கு முன்பு கூட எதிர்கட்சி தலைவர் பேசிய போது, கடந்த அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக தான் என்ற உண்மையை பேசியிருக்கிறார்.. அதனால் தான் நமக்கு தொடர்ந்து இவ்வளவு குடைச்சலை கொடுத்து வருகிறார்கள்.. நாம் முடங்கிவிடுவோம் என்று நினைத்தனர்.. திமுக என்ன மிரட்டலுக்கு பயப்படும் கட்சியா?
எவ்வளவோ நெருக்கடிக்கு மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றோம். ஆனா நான்கரை ஆண்டுகளில் இந்தியாவில் எந்த மாநில அரசு செய்யாத அளவுக்கு திட்டங்களை செயல்படுத்தி, தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளை ஈர்த்து வேலை வாய்ப்புகளை உருவாக்கி, இந்தியாவிலேயே இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டியிருக்கும் முதல் மாநிலமாக முன்னேறி இருக்கிறோம்.. இதனால் தான் நமது திராவிட மாடல் அரசை பார்த்தால் சிலருக்கு வயிறு எரிகிறது.. வாய்க்கு வந்த அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர்..
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சராக இருந்த போது தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யாமல், தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக குரல் கொடுக்காமல் பாஜகவிடம் அடிமை சாசன் எழுதிக் கொடுத்தார்.. இப்பவும் வாய் துடுக்குடன் பேசி வருகிறார். எதிர்க்கட்சி தலைவர் என்ற மாண்பே இல்லாமல், தரம் தாழ்ந்து என்னை ஒருமையில் பேசிக் கொண்டிருக்கிறார். கொள்கை இல்லாமல், தொடை நடுங்கும் பழனிசாமியின் தரத்தை மக்கள் எடை போட்டு பார்ப்பார்கள் என்று நானும் விட்டுவிட்டேன்.. ரெய்டுகளுக்கு பயந்து அதிமுகவை அடகு வைத்து விட்டார்..
திராவிடம் என்றால் என்னவென்று தெரியாத் என்று சொன்னவர் அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருக்கிறார் அது தான் வெட்கக்கேடு.. அதிமுக தொடங்கப்பட்ட போது அண்ணாயிஸம் என்று சொன்னார்கள்.. அதை இப்போது பழனிசாமி அடிமையிஸம் என்று மாற்றி, அமித்ஷாவிடம் சரணடைந்துவிட்டார்.. முழுவதுமாக நனைந்த பின்னர் முக்காடு எதற்கு என்பது பழனிசாமிக்கு பொருந்தும்.. நேற்று அமித்ஷா காலில் விழுந்த பின்னர் முகத்தை கர்சீப் எதற்கு என்று இபிஎஸ்ஸை பார்த்து கேட்கின்றனர்..” என்று காட்டமாக விமர்சித்தார்.



