குஷியில் இபிஎஸ்.. அதிமுக கட்சி விதிகள் திருத்தம்.. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

ADMK Chief secretary Edappadi Palanisamy 2 1

அதிமுக கட்சி விதிகள் திருத்தத்திற்கு எதிராக கே.சி. பழனிசாமி உள்ளிட்டோர் வழக்குத் தொடர அனுமதி வழங்கி தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்வதை எதிர்த்தும், உட்கட்சி தேர்தலை எதிர்த்தும் அதிமுக தொண்டர்கள் சார்பில் வழக்கு தொடர கே.சி பழனிசாமி மகன் சுரேன் பழனிசாமி, வழக்கறிஞர் ராம் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.. அதில் “ அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது.. இதற்காக சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது அதிமுக சட்ட திட்டங்களுக்கு எதிரானது..” என்று குறிப்பிட்டிருந்தனர்..


இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, அதிமுக தொண்டர்கள் சார்பாக கட்சி விதிகள் திருத்தத்திற்கு எதிராக கே.சி. பழனிசாமி உள்ளிட்டோர் வழக்குத் தொடர 2022-ம் ஆண்டு அனுமதி அளித்திருந்தார்..

இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி இரு நீதிபதிகள் அமர்வில் மேல் முறையீடு செய்திருந்தார்.. இந்த மனுவை அனிதா சுமந்த் மற்றும் செந்தில்குமார் அமர்வு விசாரித்தனர்.. வழக்கு விசாரணையின் போது, சுரேன் பழனிசாமி, ராம் ஆதித்தன் அதிமுக உறுப்பினர்களே இல்லை என்பதால், அதிமுக தொண்டர்கள் சார்பாக வழக்கு தொடர அனுமதி அளித்த தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும், கட்சியில் அடுத்தடுத்து மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால், இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கைகள் காலாவதியாகிவிட்டது என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதிட்டது..

கட்சியின் உறுப்பினர்கள் தான் என ஆதாரங்களுடன் நிரூபித்த பின்னரே தனி நீதிபதி வழக்கு தொடர உத்தரவிட்டார், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சுரேன் பழனிசாமி, ராம் ஆதித்தன் தரப்பு வாதிட்டது.. அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்..

இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.. எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சுரேன் பழனிசாமி, ராம் ஆதித்தன் ஆகியோர் வழக்கு தொடர அனுமதி அளித்த தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Read More : முதல்வர் ஸ்டாலின் நாளை ஜெர்மனி, இங்கிலாந்து பயணம்.. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு..

RUPA

Next Post

Video : விமான கண்காட்சி ஒத்திகையில் F-16 போர் விமானம் விபத்து.. விமானி பலியான சோகம்! நிகழ்ச்சி ரத்து!

Fri Aug 29 , 2025
நேற்று மத்திய போலந்தின் ராடோமில் நடந்த ஒரு விமான கண்காட்சிக்கான ஒத்திகையின் போது போலந்து விமானப்படையின் F-16 போர் விமானம் விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, வார இறுதியில் திட்டமிடப்பட்டிருந்த ராடோம் விமான கண்காட்சி ரத்து செய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர். நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் விமானம் ஓடுபாதையில் விழுந்து சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஆடம் […]
poland fighter jet crash

You May Like