“தோல்வி பயம் காரணமாகவே இபிஎஸ் விஜய்யை விமர்சித்து வருகிறார்.. அடுத்த முதல்வர் விஜய் தான்..” செங்கோட்டையன் பதிலடி..!

eps vijay sengottaiyan

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில் அரசியல் கட்சியினர் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.. அந்த வகையில் தவெக தலைவர் விஜய், சமீபத்தில் அதிமுகவை ஊழல் சக்தி என்று விமர்சித்திருந்தார்.. அவரின் இந்த பேச்சுக்கு முன்னாள் அமைச்சர்கள் பலரும் பதிலடி கொடுத்து வந்தனர்.. தனது சம்பளத்தை கருப்பு பணமாக வாங்கும் விஜய்யே ஊழல்வாதி என்றும் விஜய் எல்லாம் ஊழலை பற்றி பேசக்கூடாது என்றும்  விமர்சித்து வந்தனர்.


அந்த வகையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விஜய்க்கு நாடு நடப்பே தெரியவில்லை என்று பேசியிருந்தார். மேலும்” விஜய் பொதுவெளியில் வரவே இல்லை.. கரூர் சம்பவம் நடந்து 75 நாட்கள் கடந்தும் விஜய் வெளியே வரவில்லை.. நாட்டில் என்ன நடக்கிறது என்றே விஜய்க்கு தெரியவில்லை.. எந்தெந்த கட்சி எந்த கட்சி உடன் கூட்டணியில் உள்ளது என்றும் தெரியவில்லை.. எந்த கட்சி கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது என்றும் அவருக்கு தெரியவில்லை.. அவருக்கு ஒன்றுமே தெரியாத போது எங்களிடம் கேள்வி கேட்டால் நாங்கள் என்ன சொல்வது? அவரிடம் போய் கேளுங்கள்..” என்று இபிஎஸ் காட்டமாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் இபிஎஸ்-ன் இந்த பேச்சுக்கு செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார்.. இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் “ புதிதாக தோன்றியிருக்கும் தவெகவை பொறுத்தவரை மக்கள் தெளிவாக முடிவு செய்துவிட்டனர்.. பல கோடி வருவாயை இழந்தாலும் மக்கள் பணியாற்ற வந்துள்ள தவெக தலைவர் விஜய்யை பற்றி கருத்து சொல்கின்றனர்.. தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று ஒவ்வொருக்கும் தெரிந்துவிட்டது.. தோல்வி பயம் அனைத்து கட்சிகளுக்கும் உள்ளது.

புதிய தலைமை தமிழகத்தை ஆள வேண்டும், தவெக தலைவர் ஆள வேண்டும் என்ற எண்ணம் புதிதாக வாக்களிக்கும் அனைவருக்கும் உள்ளது.. வெற்றி என்பது உறுதியாகிவிட்டது.. விஜய் தான் தமிழக முதல்வராக வருவார்.. 234 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும்.. அதிமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.. அதனால் தான் இபிஎஸ் விஜய்யை விமர்சித்து வருகிறார்.. திமுகவின் பி டீமாக யார் செயல்படுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். தோல்வி பயம் காரணமாகவே மொத்தமாக கொடுக்க வேண்டிய தேர்தல் அறிக்கையை ஒவ்வொரு நாளாக வெளியிட்டு வருகிறார்..” என்று தெரிவித்தார்.

Read More : ” தமிழ் பிச்சை எடுக்க உதவாது..” கமல் பேச்சுக்கு நிர்மலா சீதாராமன் அலுவலகம் மறுப்பு..!

RUPA

Next Post

Flash : ஒடிசாவில் சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து..! பயணிகளின் நிலை என்ன?

Thu Feb 5 , 2026
ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜகபுரா ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை சென்னை சென்ட்ரல்-நியூ ஜல்பைகுரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. இதனால் மூன்று பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகின. அந்த ரயில் புவனேஷ்வரில் இருந்து கொல்கத்தா நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பத்ரக்கில் இருந்து ஒரு மீட்பு மற்றும் சீரமைப்பு குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். நிலைமையை மேற்பார்வையிட்ட அதிகாரிகள், அனைத்து பயணிகளும் காயமின்றி […]
train derails

You May Like