ஐரோப்பா காலியாகும்: நெருங்கும் 2026; பாபா வங்காவின் பயமுறுத்தும் கணிப்புகள்..

Baba Vaanga 2025

பால்கன் நாஸ்ட்ரடாமஸ்’ என்று அழைக்கப்படும் பாபா வங்கா பல ஆண்டுகளாக தனது சரியான தீர்க்கதரிசனங்கள் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர். பல்கேரியாவைச் சேர்ந்த இந்த தீர்க்கதரிசி 1996-இல் மறைந்தாலும், அவரின் முன்கணிப்புகள் (prophecies) அடிக்கடி தலைப்புச் செய்தியாகி வருகின்றன.


ஒவ்வொரு வருடமும் புதிய ஆண்டு நெருங்கும் போதும், “இந்த ஆண்டு பாபா வங்கா என்ன கணித்தார்?” என்ற ஆர்வம் மீண்டும் எழுகிறது. இளவரசி டயானாவின் மரணம், COVID-19 தொற்றுநோய் போன்றவை துல்லியத்துடன் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. இப்போது, அவரது ஒரு புதிய கணிப்பு மீண்டும் வெளிவந்துள்ளது, இது பலரிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது.

பாபா வங்கா தனது கணிப்பில், இன்னும் 19 ஆண்டுகளில் ஐரோப்பாவின் தோற்றமே முற்றிலும் மாறிவிடும், மேலும் அதிகமான மக்கள் உயிரிழப்பார்கள் என்று கூறியிருந்தார். தனது கணிப்பில் “இன்று நாம் அறிந்திருக்கும் ஐரோப்பா, 2044 ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் மறைந்து விடும். அங்கு வாழும் மக்களை தொடர்ச்சியாக அழிக்கும் ஒரு நிகழ்வு நடைபெற்று, அந்த கண்டம் வாழ்வில்லா வெறிச்சோடிய நிலமாக மாறி விடும்.” என்று கணித்துள்ளார்..

இந்த கணிப்பு தற்போது உலகம் முழுவதும் பரவலாக விவாதிக்கப்படுகிறது. மற்றொரு பாபா வங்கா தீர்க்கதரிசனத்தில், இன்னும் 18 ஆண்டுகளில் ரோமில் (Rome) ஒரு கலீஃப் ஆட்சி செய்வார் என்று கூறப்பட்டுள்ளது. ரோமா என்பது வத்திக்கான் நகரம் (Vatican City) அமைந்துள்ள இடம் என்பதால், இந்த கணிப்பு உலக அரசியல் வட்டாரங்களில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமிய மரபில், “கலீஃப்” (Caliph) என்பது முஸ்லிம் உம்மா (ummah) எனப்படும் சமுதாயத்தின் அரசியல் மற்றும் ஆன்மீகத் தலைவராகக் கருதப்படுகிறார்.
இந்த தீர்க்கதரிசனம் வெளிப்பட்டதுடன், பலரும் “ரோமில் கலீஃப் ஆட்சி?” என்ற கேள்வியுடன் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அவர் 2026 ஆம் ஆண்டுக்கான சில தீர்க்கதரிசனங்களையும் கூறியிருந்தார். அவற்றில் முக்கியமானவை பின்வருமாறு:

இயற்கை பேரழிவுகள் அதிகரிக்கும்

பாபா வங்காவின் தீர்க்கதரிசனங்களின்படி, 2026 முதல் உலகம் முழுவதும் தொடர்ச்சியான பேரழிவுகள் நிகழக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. பல பெரும் நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள், மற்றும் கடுமையான காலநிலை மாற்றங்கள் உலகின் பல பகுதிகளை கடுமையாகப் பாதிக்கக்கூடும் என்று அவர் கணித்துள்ளார்.. இதனால் மனித வாழ்க்கை, பொருளாதாரம், மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை அனைத்தும் பெரும் சவால்களை சந்திக்க நேரிடும் என்று அவரது தீர்க்கதரிசனம் எச்சரிக்கிறது.

A) ஆதிக்கம் செலுத்தும் காலம்

பாபா வங்காவின் கணிப்பின்படி, 2026ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் மிகப் பெரிய முன்னேற்றம் நடைபெறும். AI அதிநவீன அளவில் வளர்ந்து, மனித சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு வரக்கூடும். இன்றைய நிலையில், செயற்கை நுண்ணறிவு வேகமாக முன்னேறி வரும் சூழலைக் கருத்தில் கொண்டால், அவரது இந்த தீர்க்கதரிசனம் அதிர்ச்சியூட்டும் அளவிற்கு பொருத்தமானதாக இருக்கிறது என்று அவர் கணித்துள்ளார்.. அதாவது, மனிதர்கள் உருவாக்கிய தொழில்நுட்பமே ஒருநாள் அவர்களையே கட்டுப்படுத்தும் அபாயம் உண்டாகலாம் என்ற எச்சரிக்கையாக இது பார்க்கப்படுகிறது..

வேற்று கிரகவாசிகளுடன் தொடர்பு (Alien Contact)

பாபா வங்கா கூறியதன்படி, 2026 நவம்பரில் மனிதர்கள் முதன்முறையாக வெளி கிரகவாசிகளுடன் (extraterrestrial life) தொடர்பு கொள்ள வாய்ப்பு உள்ளது.
அவரின் தீர்க்கதரிசனத்தில், ஒரு பெரிய விண்கலம் பூமியின் வான்வெளிக்குள் நுழையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மனித இனம் எதிர்பாராத ஒரு அறிவியல் அதிர்ச்சியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

மூன்றாம் உலகப்போர்

பாபா வங்காவின் மிகச் sensational ஆன கணிப்புகளில் ஒன்று மூன்றாம் உலகப்போர் (World War 3) 2026-இல் தொடங்கும் என்பது தான்.. உலக அதிநிலைகளுக்கு இடையிலான பதற்றம் அதிகரிக்கும், சீனா தைவானை கைப்பற்றும் வாய்ப்பு இருப்பதாக அவர் கணித்துள்ளார்..

ரஷ்யா மற்றும் அமெரிக்கா நேரடியாக மோதும் நிலை

இந்தச் சூழ்நிலைகள், உலகளாவிய ரீதியில் மிகப்பெரிய அரசியல் மற்றும் ராணுவ மோதலுக்கு வழிவகுக்கும் என அவரது தீர்க்கதரிசனம் எச்சரிக்கிறது.

RUPA

Next Post

இந்த 4 நாட்களில் நகம் வெட்டினால் வறுமை வரும்.. லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்..!

Wed Nov 12 , 2025
நமது பாரம்பரியங்களில், சில சிறிய சடங்குகளைப் பின்பற்றுவது மங்களகரமானது மற்றும் செழிப்பைத் தரும் என்று நம்பப்படுகிறது. அதேபோல், சில நாட்களில் நகங்களை வெட்டுவது அசுபமானது மற்றும் வறுமையைத் தரும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். வேதங்களின்படி, எதிர்மறை சக்தியுடன் தொடர்புடைய இந்த நான்கு நாட்களில் நகங்களை வெட்டுவது லட்சுமி தேவியின் கோபத்திற்கும் நிதி சிக்கல்களுக்கும் வழிவகுக்கும். நகங்களை வெட்டக் கூடாத அந்த 4 நாட்கள்: சனிக்கிழமை: சனிக்கிழமை நகங்களை வெட்டுவது சனி […]
nail cutter

You May Like