தேனி மாவட்டம் கூடலூர் எல்லைத்தெருவை சேர்ந்தவர் மோக்சானந்த், மெக்கானிக்கல் என்ஜினீரியங் முடித்துவிட்டு மதுரை வள்ளுவர் காலனி, வாசுகி நகரில் தங்கி, போட்டோகிராபிக் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. வரும் 6 ஆம் தேதி திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில், மோக்சானந்த் அந்த மணப்பெண்ணின் செல்போனிற்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். அதில், ‘எல்லோரும் கேம் ஆடுறாங்க, நீ என்னை திருமணம் செய்தால் சந்தோஷமாக இருக்கமாட்டாய், எனக்கு வாழ பிடிக்கவில்லை. சாகும் எண்ணம் வருகிறது. தூக்குப்போட்டு சாக போகிறேன், என்னை தனியா விடுங்க’ என கூறியிருக்கிறார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மணப்பெண் இதுகுறித்து அவர்களின் உறவினர்களிடம் கூறினார். இதனை தொடர்ந்து துளசிதேவி உள்ளிட்டோர், தேனியில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு வந்து பார்த்துள்ளனர்., மோக்சானந்த் தங்கி இருந்த வீடு பூட்டி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு மோக்சானந்த் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தல்லாகுளம் போலீசார் வந்தனர். மோக்சானந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் உயிரைவிட்டதற்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
Read more: ஓடும் ரயிலில் லோகோ பைலட்டுக்கு மாரடைப்பு ஏற்பட்டால் என்ன நடக்கும்..? – அவசியம் தெரிஞ்சுக்கோங்க