இன்றுமுதல் எல்லாம் மாறிடுச்சு!. ஆதார் கட்டணம், UPI முதல் ஆன்லைன் கேமிங் வரை!. என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?

october rules

அக்டோபர் 1 ஆம் தேதி முதல் என்பிசிஐ (NPCI) என்று அழைக்கப்படும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India) விதித்த யுபிஐ விதிகள் அமலுக்கு வருகின்றன. ரூ.2,000 வரையில் பணத்தை கேட்டு கூகுள் பே (Google Pay), பேடிஎம் (Paytm), போன்பே (PhonePe), பீம் (BHIM) போன்ற யுபிஐ ஆப்களை பயன்படுத்தும் கஸ்டமர்களுக்கு இந்த விதிகள் நேரடியாக அமலுக்கு வருகின்றன.


யுபிஐ கலெக்ட் ரெக்கொஸ்ட் (UPI Collect Request) மூலம் ரூ.2,000 வரையில் பணத்தை பெற்று கொள்ளும் சேவையானது, அக்டோபர் 1ஆம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது. ஆனால், இது பி2எம் (P2M) பரிவர்த்தனைகளுக்கு பொருந்தாது. அந்த சேவை வழக்கம்போலவே கிடைக்கும். தனிநபர்களால் பயன்படுத்தப்படும் பி2பி (P2P) என்று அழைக்கப்படும் பீர்-டு-பீர் (Peer-to-Peer) பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த விதிகள் அமலாகிறது.

இப்போது, யுபிஐ கலெக்ட் ரெக்கொஸ்ட் கொடுத்து ரூ.2,000 வரையில் பணத்தை பெற்று கொள்ளலாம். அதாவது, கூகுள் பே, போன்பே, பேடிஎம் பீம் போன்ற ஏதாவது ஒரு யுபிஐ ஆப்கள் மூலம் ரூ.2,000 வரம்புக்குள் ஒரு தொகையை கேட்டு, தனநபர்களின் யுபிஐ ஐடிக்கு கலெக்ட் ரெக்கொஸ்ட் கொடுக்க முடியும். இந்த ரெக்கொஸ்ட்டை ஏற்று, பின் நம்பர் கொடுத்தால் போதும், பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பணம் எடுக்கப்படும்.

இதற்காக மொபைல் நம்பர் அல்லது யுபிஐ ஐடியை செலுத்த வேண்டியது கிடையாது. அதேபோல எவ்வளவு பணத்தை அனுப்ப வேண்டும் என்பதையும் கொடுக்க வேண்டியது கிடையாது. யுபிஐ கலெக்ட் ரெக்கொஸ்ட் மூலமே அது அனைத்தும் முன்கூட்டியே போடப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து பின்நம்பர் கொடுத்தாலே போதும், உங்களது பணம் எடுக்கப்படும். இதனாலேயே இந்த சேவை நிறுத்தப்படுகிறது.

ஆகவே, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் யுபிஐ கலெக்ட் ரெக்கொஸ்ட் சேவை மூலமாக தனநபர்கள் பணத்தை பெற்று கொள்ள முடியாது. பி2எம் (P2M) பரிவர்த்தனைகள் மூலமாக செய்யப்படும் யுபிஐ கலெக்ட் ரெக்கொஸ்ட் தொடர்ந்து செயல்படும். ஏனென்றால், வணிக ரீதியாக நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாயால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் யுபிஐ கலெக்ட் ரெக்கொஸ்ட் கொடுக்கின்றன.

மேலும், கூகுள் பே மற்றும் பேடிஎம் ஆகிய நிறுவனங்கள் யுபிஐ ஐடிக்களில் (UPI IDs) புதிய விதிகளை அமலுக்கு கொண்டுவருகின்றன. இந்த விதிகள் மூலம் கூகுள் பே மற்றும் பேடிஎம் கஸ்டமர்கள் தங்களது யுபிஐ ஐடிக்களை மாற்றி கொள்ள முடியும். இதனால், வழக்கமாக பயன்படுத்தும் ஐடியை எளிதாக மாற்ற முடிவதால், பாதுகாப்பு அதிகமாக கிடைக்க இருக்கிறது. இதை அடிக்கடி மாற்றி கொள்ளவும் முடிகிறது.

இதில் உங்களுக்கு விரும்பமான எழுத்துக்கள் மற்றும் எண்களை கொடுக்க முடியும். இதுபோக ஆர்பிஐ (RBI) என்று அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல் புதிய விதிகளை அமல் செய்ய இருக்கிறது. இது பேங்க் அக்கவுண்ட் மூலமாக டிஜிட்டலாக பணம் அனுப்பும் ஒட்டுமொத்த பரிவர்த்தனைகளுக்கும் அமல் செய்யப்பட இருக்கிறது.

ஆகவே, ஆர்டிஜிஎஸ், நெப்ட் உள்ளிட்ட பரிவர்த்தனைகளுக்கும் இது பொருந்துகிறது. அதாவது, டிஜிட்டல் பரிவர்த்தனையில் போதும், வெரிபிகேஷன் செய்ய எஸ்எம்எஸ் அடிப்படையிலான ஓடிபி கொடுக்கப்படுகிறது. இந்த வெரிபிகேஷன் மட்டுமல்லாமல், கூடுதலாக ஒரு வெரிபிகேஷனை சேர்க்க ரிசர்வ் வங்கி விதிகளை கொண்டு வருகிறது. ஆகவே, இரண்டு-அடுக்கு-ஆதன்டிகேஷன் அமலுக்கு வர இருக்கிறது.

இதில் ஆதார் கார்டு மூலம் பயன்படுத்தப்படும் பயோமெட்ரிக் ஆதன்டிகேஷன் சேர்க்கப்படலாம். ஆகவே, ஃபிங்கர்பிரிண்ட், பேசியல் ரிககனைசேஷன் கூடுதல் வெரிபிகேஷனுக்கு பயன்படுத்தபடலாம். அல்லது, பாஸ்வோர்ட்கள், பாஸ்பேர்ஸ் போன்றவையும் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு தெரிய வர இருக்கிறது.

ஆதார் அட்டை சேவைகளுக்கான கட்டணம், வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆதாரில் மாற்றம் (பெயர், முகவரி) செய்ய வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.50-ல் இருந்து ரூ.75-ஆக உயர்த்தப்படுகிறது. அதே போல, Biometric மாற்றம் செய்ய, கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.125-க்கு உயர்த்தப்படுகிறது. ஆனால், புது ஆதார் பெற விண்ணப்பிப்போருக்கு கட்டணம் இல்லை. இது முதல்கட்ட விலை ஏற்றம் என்றும், செப்டம்பர் 30, 2038 வரை இது அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டு சேவைகளுக்கான கட்டணம் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் உயரும் எனவும், ஆனாலும் இந்த கட்டண உயர்வு சிறிய அளவில் மட்டுமே இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று (அக்டோபர் 1 2025) முதல் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலம் டிக்கெட்டுகளை (General Reserved Tickets) முன்பதிவு செய்வதற்கு ஆதார் கட்டாயம் என இந்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது ரயில் டிக்கெட் முன்பதிவு செயல்பாட்டில் சில முக்கிய மாற்றங்கள் வர உள்ளன.

முன்பதிவுகள் திறந்த முதல் 15 நிமிடங்களுக்கு, ஆதாருடன் இணைக்கப்பட்ட IRCTC கணக்குகளைக் கொண்ட பயணிகள் மட்டுமே ஐஆர்சிடிசி வலைத்தளம் அல்லது செயலியில் டிக்கெட்டுகளை முன்பு செய்ய முடியும். குறிப்பாக ரயில் டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி அதிக விலைக்கு விற்கும் இடைத்தரகர்களைத் தடுக்கும் வகையில் இந்த புதிய விதிகள் கொண்டுவரப்படுகிறது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ரயில்வே சுற்றறிக்கையில், டிக்கெட் முன்பதிவின் நன்மைகள் அனைவரையும் சென்றடைய வேண்டும். இதை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய, புதிய விதிகள் கொண்டுவரப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. எனவே ஆதார் அங்கீகாரம் பெற்ற பயனர்கள் மட்டுமே முதல் 15 நிமிடங்கள் பொது முன்பதிவு டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும் என்று கூறப்பட்டது. பின்பு இந்த விதிகள் தட்கல் முன்பதிவுகளுக்கு ஏற்கனவே உள்ள காட்டுப்பாடுகளைப் போலவே அமைந்துள்ளது.

அக்டோபர் 1 முதல் ஆதார் இணைக்கப்பட்ட IRCTC கணக்குகள் மட்டுமே முதல் 15 நிமிடங்களுக்கு பொது முன்பதிவு டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும். உதாரணமாக முன்பதிவு காலை 10 மணிக்கு திறந்தால், ஆதார் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் மட்டும் காலை 10 மணி முதல் காலை 10.15 மணி வரை முன்பதிவு செய்ய முடியும். அந்த 15 நிமிடங்களுக்குப் பிறகு IRCTC கணக்கு உள்ள எவரும் வழக்கம் போல் முன்பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் நேரடி கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவுகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது ஆதார் இல்லாமல் ரயில்வே கவுண்டர்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டையை இணைப்பது போலி கணக்குகள் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதைத் தடுக்க உதவும், அதிக விலைக்கு டிக்கெட்டுகளை வாங்கி விற்கும் தரகர்களைத் தடுக்கும் வகையில் தான் இந்த விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. முன்பு கூறியதை போல் இந்த விதிகள் ஏற்கனவே தட்கல் முன்பதிவுகளில் உள்ளது. இப்போது இந்த விதி பொது முன்பதிவுகளுக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆகவே முதல் 15 நிமிடங்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அக்டோபர் 1ஆம் தேதிக்கு முன் உங்கள் ஆதாரை உங்கள் IRCTC கணக்குடன் இணைக்க வேண்டும். இதை எப்படி செய்வது என்பதை தற்போது விரிவாகப் பார்க்கலாம்.

ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் அட்டையை இணைப்பது எப்படி? ஐஆர்சிடிசி வலைத்தளம் அல்லது செயலியில் நுழையவும். அடுத்து மை ப்ரொபைல் பகுதிக்குச் செல்லவும். அதன்பின்னர் ஆதார் அங்கீகாரம் (Aadhaar Authentication) என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும். உங்கள் ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஓடிபி வரும் அதை இங்கு உள்ளிட்டு சரிபார்க்கவும். உங்கள் ஐஆர்சிடிசி கணக்கு விவரங்கள் (பெயர், மொபைல் எண் போன்றவை) ஆதாருடன் பொருந்துகின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

பென்ஷன் / ஓய்வூதிய கட்டணங்களில் மாற்றம்: ஓய்வூதிய தாரர்களுக்கான இந்த மாற்றம் – பெரும்பாலும் என்பிஎஸ் (NPS), யுபிஎஸ் (UPS), அடல் ஓய்வூதிய யோஜனா (Atal Pension Yojana) மற்றும் என்பிஎஸ் லைட்டில் (NPS Lite) சேர்ந்தவர்களுக்கான மாற்றம் ஆகும்.

பிஎப்ஆர்டிஏ (PFRDA) என்கிற ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Pension Fund Regulatory and Development Authority) ஆனது மத்திய பதிவு பராமரிப்பு முகமைகள் (Central Recordkeeping Agencies – CRA) வசூலிக்கும் கட்டணங்களை திருத்தி உள்ளது.

புதிய பிஆர்ஏஎன்-ஐ (PRAN) திறக்கும்போது அரசு ஊழியர்களிடம் இப்போது இ -பிஆர்ஏஎன் கிட்டுக்கு ரூ.18 மற்றும் பிஸிக்கல் பிஆர்ஏஎன் கார்டுக்கு ரூ.40 வசூலிக்கப்படும். வருடாந்திர பராமரிப்பு கட்டணம் ஒரு கணக்கிற்கு ரூ.100 ஆக இருக்கும். அடல் ஓய்வூதிய யோஜனா மற்றும் என்பிஎஸ் லைட் சந்தாதாரர்களுக்கான கட்டண அமைப்பும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது, பிஆர்ஏஎன் திறப்பு மற்றும் வருடாந்திர பராமரிப்பு கட்டணங்கள் இப்போது ரூ.15 ஆகவும், பரிவர்த்தனை கட்டணங்கள் ரூ.0 ஆகவும் இருக்கும்.

பணம் சம்பந்தப்பட்ட ஆன்லைன் கேம்களுக்கான தடை (Ban on Online Money Games) ஆனது அக்டோபர் 1 ஆம் தேதி அமல்படுத்தப்படும் என்றும், அதே நாளில் ஆன்லைன் விளையாட்டுகளை மேம்படுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின் (Promotion and Regulation of Online Games Act – PROGA) விதிகள் முறையாக அறிவிக்கப்படும் என்றும் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்திருந்தார்.

பிஆர்ஓஜிஏ (PROGA) திட்டமானது, கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி மக்களவையிலும், ஆகஸ்ட் 21 ஆம் தேதி ராஜ்யசபாவிலும் மழைக்கால கூட்டத்தொடரின் போது நிறைவேற்றப்பட்டது, ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்றது. இந்த சட்டம் அனைத்து வகையான ஆன்லைன் பண விளையாட்டுகளையும் தடை செய்கிறது, இதில் பணமாக மாற்றக்கூடிய கேஷ் ரிவார்ட்ஸ் (Cash Rewards) அல்லது விர்ச்சுவல் காயின்களை (Virtual Coins) வழங்குவது அடங்கும்.

இந்த புதிய விதிமுறைகளானது இ-ஸ்போர்ட்ஸ், பணம் சம்பந்தப்படாத திறன் சார்ந்த கேம்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு ஆன்லைன் செயல்பாடுகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இந்த புதிய சட்டத்தை மீறி, ஆன்லைன் மணி கேம்ஸை வழங்குபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் ஆன்லைன் மணி கேம்ஸ் தளங்களை விளம்பரப்படுத்தினால் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

இந்திய அரசாங்கத்தின் இந்த புதிய நடவடிக்கை, புதிய விதிமுறைகள் மற்றும் புதிய சட்டம் ஆனது பயனர்களை பாதுகாப்பதையும், வெளிநாட்டு ஆபரேட்டர்களை கட்டுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. அதே நேரத்தில் உள்நாட்டு ரியல்-மணி கேமிங் துறையின் மாற்றத்தையும் ஆதரிக்கிறது.

அக்டோபரில் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அரசாங்கம் ஒரு பெரிய பரிசை வழங்க உள்ளது. அக்டோபர் 10-11 அன்று நடைபெறும் ஒரு முக்கியமான கூட்டத்தில், சந்தாதாரர்கள் தங்கள் பிஎஃப் கணக்குகளில் இருந்து நேரடியாக ஏடிஎம்கள் மூலம் பணத்தை எடுக்க அனுமதிக்கும் திட்டம் முன்வைக்கப்படும். குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1,000 லிருந்து ரூ.1,500-ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம். கூடுதலாக, ஈபிஎஃப்ஓ அதன் புதிய டிஜிட்டல் சேவையான “இபிஎஃப்ஒ 3.0” ஐ அக்டோபரில் தொடங்கக்கூடும்.

Readmore: தொடர் விடுமுறை!. ரயில் பயணிகளுக்கு புதிய ரூல்ஸ்!. நடைமேடையில் நின்றால் அபாரதம்!. ரயில்வே அதிரடி!

KOKILA

Next Post

கரூர் சம்பவத்திற்கு திமுக அமைத்த குழு மீது சந்தேகம்...! தமிழக காங்கிரஸ் குற்றச்சாட்டு...!

Wed Oct 1 , 2025
ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், கரூர் நெரிசல் சம்பவம் குறித்த விசாரணையில் இருந்து விலக வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் தெரிவித்துள்ளார். கரூரில் கடந்த 27ம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் அரசியல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி […]
aruna jagadeesan 2025

You May Like