திருமணத்திற்கு பிறகும் லவ் டார்ச்சர் கொடுத்த முன்னாள் காதலன்.. ஏரிக்கரையில் மிதந்த சடலம்..!! அதிர வைக்கும் பின்னணி..

Crime 2025

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பாதிரி ஏரிக்கரையில், 2024 மார்ச் 1-ம் தேதி அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது. கழுத்தில் கயிறு பிணைக்கப்பட்டிருந்ததால், இது கொலைவழக்கு என ஒலக்கூர் போலீசார் உறுதி செய்தனர். சடலத்தை பறிமுதல் செய்து, விசாரணை துவங்கினாலும், நீண்ட நாட்களாக இறந்தவரின் அடையாளமே தெரியவில்லை.


இறந்தவரின் புகைப்படம் மற்றும் அடையாள விவரங்கள் சமூக வலைதளங்களிலும் நாளிதழ்களிலும் வெளியிடப்பட்டன. அதுவும் பலன் அளிக்காத நிலையில், மாவட்ட எஸ்பி சரவணன் உத்தரவின் பேரில், திண்டிவனம் டிஎஸ்பி பிரகாஷ் மேற்பார்வையில், பிரம்மதேசம் காவல் ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில் சிறப்பு போலீஸ் குழு அமைக்கப்பட்டது.

சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு, ஏரிக்கரையில் கொல்லப்பட்டவர் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. விசாரணையில், அவர் ஆண்டிப்பட்டி அருகே எரதிமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஜோதிமணி (30) என உறுதி செய்யப்பட்டது. ஜோதிமணி, அதே பகுதியைச் சேர்ந்த உமா என்ற பெண்ணுடன் காதலித்து வந்துள்ளார். ஆனால், குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்ததால், உமாவுக்கு வேறு ஒருவருடன் அவசர திருமணம் செய்து வைத்தனர்.

திருமணத்திற்கு பிறகும், உமாவை மறக்க முடியாத ஜோதிமணி அடிக்கடி தொந்தரவு செய்தார். “லவ் டார்ச்சர்” அதிகரித்ததால், உமா பெற்றோரிடம் புகார் செய்ததாக தெரியவந்தது. இதனால், “ஜோதிமணி உயிருடன் இருந்தால், மகள் நிம்மதியாக வாழ முடியாது” என்று எண்ணிய பெற்றோர், அவரை கொலை செய்யத் திட்டமிட்டனர்.

2024 மார்ச் 1-ம் தேதி, உமா, அவரது தந்தை மாரியப்பன், தாய் பஞ்சவர்ணம் ஆகியோர், ஜோதிமணியை டாட்டா ஏசி வாகனத்தில் பாதிரி ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே மூவரும் சேர்ந்து கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்து, சடலத்தை அங்கேயே வீசி விட்டுச் சென்றனர். நீண்ட விசாரணைக்குப் பிறகு, போலீசார் இந்த கொலை மர்மத்தை தீர்த்தனர். இதில் தொடர்புடைய உமா மற்றும் அவரது பெற்றோர் மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Read more: தினமும் வெந்நீரில் குளிப்பதால் இவ்வளவு நன்மைகளா..? ஆனா இந்த பிரச்சனைக்கும் தயாரா இருங்க..!!

English Summary

Ex-boyfriend who tortured her even after marriage.. Body found floating on the lake shore..!!

Next Post

அரிய குரு புஷ்ய யோகம் : இந்த ராசிக்காரர்களுக்கு அமோக பலன்கள்! அதிர்ஷ்டம் பெருகும்!

Thu Aug 21 , 2025
ஜோதிடத்தில் குரு மற்றும் பூச நட்சத்திரத்திற்கு சிறப்பு இடம் உண்டு. குரு அறிவு, செல்வம், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தின் பிரதிநிதியாகக் கருதப்படுகிறது. பூச நட்சத்திரம் மிகவும் மங்களகரமான நட்சத்திரங்களில் ஒன்றாகும். மேலும் இது “நட்சத்திரங்களின் ராஜா” என்றும் அழைக்கப்படுகிறது. பூச நட்சத்திரம் ஆதரவு மற்றும் செழிப்பு ஆகிய குணங்களைக் கொண்டுள்ளது. குரு பூச நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் போது, ​​குரு புஷ்ய யோகா என்று அழைக்கப்படும் ஒரு தனித்துவமான யோகம் உருவாகிறது. […]
Guru Pushya yogam 1

You May Like