தச்சரை தாக்கிய பாஜக எம்எல்ஏவின் சகோதரர்…..! குஜராத்தில் பரபரப்பு…..!

குஜராத் மாநிலத்தில் பூபேந்திரா படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகின்றது. அங்கே இருக்கின்ற வதோதரா மாவட்டத்தில் உள்ள சாவ்லி என்ற பகுதியில் சட்டசபை உறுப்பினராக இருப்பவர் பாஜகவை சேர்ந்த கேடன் இனாம்தார், இவருடைய சகோதரர் சந்தீப் இனாம்தார்.


இந்த சூழ்நிலையில், எம்.எல்.ஏ வின் சகோதரரான சந்தீப் இனாம்தார் வசிக்கும் பகுதியில் அணில் மிஸ்திரி( 56) என்ற நபர் தச்சு வேலை பார்த்து வருகின்றார். அவருக்கு சிந்தன் மற்றும் பரத் உள்ளிட்ட இரு மகன்கள் இருக்கிறார்கள் அவர்கள் வாகனங்களை வாடகைக்கு விடும் தொழிலை செய்து வருகிறார்கள் இந்த சூழ்நிலையில், ஹோலி பண்டிகை தினமான கடந்த 8ம் தேதி அணில் மிஸ்தரியின் மூத்த மகன் சிந்தன் வழக்கம் போல தன்னுடைய கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது எம் எல் ஏ வின் தம்பி சந்தீப் மற்றும் அவருடன் இருந்த அவருடைய நண்பர்கள் சிலர் மிகவும் சத்தமான ஒலியில் பாட்டு கேட்டுக் கொண்டு நடனமாடிக் கொண்டிருந்தார்கள் கடையில் இருந்த சிந்தன் தன்னுடைய வேலைக்கு இடையூறாக இருந்ததால் சந்திப்பிடம் சென்று சத்தத்தை குறைத்துக் கொண்டு கொண்டாடுங்கள் என்று தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக, சந்தீப் கோபமடைந்ததால் அவரும் அவருடைய நண்பர்கள் 5 பேரும் சேர்ந்து சிந்தனை சரமாரியாக தாக்கி இருக்கின்றனர்.

இதன் காரணமாக, அங்கிருந்து தப்பிச்சென்ற சிந்தனை தன்னுடைய தந்தை அணில் மிஸ்தரியிடம் இங்கு நடந்ததை தெரிவித்திருக்கிறார். உடனடியாக அணில் மிஸ்திரி தன்னுடைய வாகனத்தை எடுத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்தார். அங்கிருந்த சந்திப்பும் அவருடைய கும்பலும் நியாயம் கேட்பதற்காக வந்த அணிலையும் சரமாரியாக தாக்கி இருக்கின்றன. இந்த தாக்குதலில் அணிலின் கண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.

அக்கம் பக்கத்தில் இருந்த கடைக்காரர்கள் இந்த தாக்குதலை விலக்கி அணிலை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள் அணிலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து அவர் காவல்துறையிடம் புகார் வழங்கியிருக்கிறார். அந்த புகாரின் அடிப்படையில் சந்திப் மற்றும் அவருடைய நண்பர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு காவல்துறையினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Next Post

அதிகம் பரவும் H3N2 வைரஸ்...! இந்த மருந்தை தான் பயன்படுத்த வேண்டும்...! WHO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!

Sun Mar 12 , 2023
பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பருவகால வைரஸ் காய்ச்சல் தொடர்பாக ஒருங்கிணைந்த நோய்க் கண்காணிப்புத் திட்டத்தின் மூலம் மத்திய சுகாதார அமைச்சகம் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது. H3N2 வகை காய்ச்சல் தொடர்பாகவும், இணை நோய்கள், உயிரிழப்புகள் குறித்தும் சுகாதார அமைச்சகம் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இணை நோய்களைக் கொண்ட சிறு குழந்தைகள் மற்றும் முதியோர் இந்த பருவகால வைரஸ் காய்ச்சலால் அதிகம் பாதிக்கபடக்கூடியவர்களாக உள்ளனர். H3N2 காய்ச்சலால் […]
images 2023 03 12T101221.424

You May Like