Flash : 5 பள்ளி மாணவர்கள் துடிதுடித்து பலி..! தமிழகத்தில் 2 இடங்களில் கோர விபத்து..!

Accident 2026 2

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காரக்கோட்டை என்ற இடத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் பள்ளி முடிவுந்து வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.. அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக சாலையோரம் நடந்து சென்ற மாணவர்கள் மீது மோதியது.. இந்த விபத்தில் 4 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.. கார் ஓட்டுநர் உலகநாதனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. கார் மோதிய விபத்தில் 4 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..


அதே போல் உளுந்தூர்ப்பேட்டை அருகே நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர்.. உளுந்தூர் பேட்டை அருகே மேட்டத்தூர் பகுதியில் நெடுஞ்சாலையில் ஒரே பைக்கில் சென்ற 5 பள்ளி மாணவர்கள் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது எதிரே வந்த கார் மோதிய விபத்தில் ஜஸ்டின், புருனோ, ஆகிய இரு தனியார் பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர்.. ஆலன், சுஜித், அஜய் ஆகிய 3 மாணவர்கள் படுகாயத்துடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்..

சாலை விபத்து நடைபெற்ற மேட்டத்தூர் பகுதியில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.. பின்னர் காவல்துறையினர் போக்குவரத்தை ஒருவழி பாதையாக மாற்றி, சரி செய்யும் பணியில் ஈடுபட்ட நிலையில், நிலைமை சீரானது..

Read More : 16 பேர் பலி.. 37 பேர் காயம்..! போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூடு..!

RUPA

Next Post

இன்றிரவு மீண்டும் ஈரான் மீது கடுமையான தாக்குதலை நடத்தப்போறோம்.. டிரம்ப் பகிரங்க மிரட்டல்..!

Thu Jun 11 , 2026
ஈரானுடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்றிரவு ஈரான் மீது ‘மிகக் கடுமையான’ தாக்குதலை நடத்தப்போவதாகக் கூறினார். மேலும், “எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும்” ஈரானின் முக்கிய பகுதியான ‘கர்க் தீவு’ (Kharg Island) உட்பட அந்நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைகள் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவோம் என்றும் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் அவர் எச்சரித்தார். அமெரிக்கா – ஈரான் இடையே தொடர்ந்து இரண்டாவது […]
Trump warning to iran

You May Like