சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5000 உயர்ந்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.80 உயர்ந்து ரூ.13,220-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 640 அதிகரித்து குறைந்து ரூ.1,05,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை 2 நாட்களில் மட்டும் ரூ.3,360 குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதே போல் இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.230க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.2.30 லட்சத்திற்கு விற்பனையாகிறது.



