முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது.. இந்த பட்டியலில் த.வெ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதனிடையே தமிழக அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று விசிக, ஐயூஎம்எல், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்தார்.. அமைச்சரவையில் பங்கு பெறுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று விசிக, ஐயூஎம்எல் கட்சிகள் தெரிவித்திருந்தன. ஆலோசனையின் முடிவில் அமைச்சரவையில் பங்கேற்பதாக இரு கட்சிகளும் அறிவித்தன..
அதன்படி தமிழக அமைச்சரவை இன்று மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டது.. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.. இந்த விழாவில் முதல்வர் விஜய், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.. விசிக எம்.எல்.ஏ வன்னி அரசு, ஐயுஎம்.எல் கட்சி எம்.எல்.ஏ ஷாஜகான் ஆகியோர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.. இந்த இருவருக்கும் பொறுப்பு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்..
இதன் மூலம் 1952-க்கு பின்னர் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.. முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர்கள், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளுக்கு தலா 1 அமைச்சர் என கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
தமிழக அமைச்சரவையில் ஏற்கனவே 7 பட்டியலின அமைச்சர்கள் இடம்பெற்ற நிலையில் விசிகவின் வன்னி அரசு மூலம் இந்த அமைச்சர்கள் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.. அதே போல் சிறுபான்மையினர் 5 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்..
இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட இரு அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்து மக்கள் மாளிகை அறிவிப்பு வெளியிட்டது. விசிக எம்.எல்.ஏ வன்னிஅரசுக்கு சமூகநீதித்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.. ஆதி திராவிடர், பழங்குடியினர் நலன் சார்ந்த விவகாரங்கள் சமூகநீதித்துறையின் கீழ் வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அமைச்சராக பொறுப்பேற்ற ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலத்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Read More : அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது.. ஆய்வுகளால் எழுந்த சர்ச்சை.. அமைச்சர் ஆனந்த் அதிரடி உத்தரவு..!



