தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் கடும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது.. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் தலைமையிலான அணி, கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி என அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது..
சட்டமன்றத்தில் கடந்த 13-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுகவை சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.. இதன் மூலம் தவெக அரசின் ஆதரவு எண்ணிக்கை 144ஆக உயர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அரசு தப்பியது..
அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி எஸ்.பி.வேலுமணி அணி தவெகவுக்கு ஆதரவு அளித்ததால் அதிமுகவில் பெரும் பூகம்படம் வெடித்தது.. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு 22 எம்.எல்.ஏக்களின் ஆதரவும் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு 25 எம்.எல்.ஏக்களீன் ஆதரவும் இருந்தது.. இதையடுத்து 29 பேரின் கட்சி பொறுப்புகளையும் பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.. மேலும் புதிய மாவட்ட செயலாளர்களையும் நியமித்திருந்தார்..
இந்த சூழலில் நேற்று எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்த 5 எம்.எல்.ஏக்கள் இபிஎஸ் பக்கம் சாய்ந்துவிட்டனர்.. மேலும் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்யபாமாக ஆகிய 3 அதிமுக எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.. மேலும் ராஜினாமா செய்த கையோடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்..
இந்த நிலையில் அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா இன்று தனது பதவியை ராஜினாமா செய்ய வந்தார்… சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.. எனினும் அவர் தட்டச்சு செய்து கொண்டு வரப்பட்ட ராஜிமானா கடிதத்தை கொண்டு வந்ததால் சபாநாயகர் அதனை ஏற்கவில்லை.. கையால் எழுதப்பட்ட கடிதத்தை கொடுக்க வேண்டும் என்பதே சட்டப்பேரவை விதி.. எனவே கைப்பட எழுதிய கடிதத்தை கொண்டு வரும்படி, சபாநாயகர் அறிவுறுத்தினார்.. தொடர்ந்து இசக்கி சுப்பையா தனது கைப்பட ராஜினாமா கடிதத்தை எழுதி வருகிறார்..
ராஜினாமா செய்துவிட்டு இவரும் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.. அதிமுகவில் மேலும் சில எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்யவிருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..



