அதிமுக பரப்புரையில் ஒலித்த ‘ஸ்டாலின் தொடரட்டும் பாடல்’.. உடனே இபிஎஸ் கொடுத்த ரியாக்‌ஷன்..! வைரல் வீடியோ..!

eps campaign n

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.. அப்போது திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை முதல்வர் கடுமையாக விமர்சித்தார்..


அப்போது பேசிய அவர் “ திமுக கூட்டணியில் அதிக கட்சிகள் இருப்பது உண்மை தான் ஆனால் வாக்கு இல்லை.. அதிமுக கூட்டணியில் கட்சிகள் குறைவாக இருந்தாலும் வாக்கு வங்கி நிறைய உள்ளது..

அதிமுக என்பது ஏணியில் ஏற்றிவிடும் கட்சி.. ஆனால் உச்சிக்கு சென்றதும் ஏணியை பறிக்கும் கட்சி தான் திமுக.. திமுகவிற்கு முட்டுக்கொடுத்து செல்வாக்கு குறைந்ததால் கம்யூனிஸ்ட் கட்சிக்கான சீட்டை திமுக குறைத்துவிட்டது..

அப்படிப்பட்ட கட்சியில் தான் பிரேமலதா கூட்டணியில் சேர்ந்திருக்கிறார்.. நம்ம கூட்டணியில் நம்பி வந்தவர்களுக்கு சின்னம் பெற்று தந்த கட்சி அதிமுக.. கூட்டணி கட்சி வேட்பாளர்களை பாடுபட்டு வெற்றி பெற கூடிய கட்சி அதிமுக.. அதிமுக தலைமை என்ன சொல்கிறதோ அதை நடைமுறைப்படுத்தக் கூடியவர்கள் அதிமுக தொண்டர்கள்.

திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கு வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை.. ஆனால் அதிமுக ஆட்சி அமையும் போது கொடுக்கப்படும் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றபப்டும் என்று கூறினார். அதிமுக ஆட்சி அமைந்தா எல்லா குடும்ப அட்டைக்கும் ரூ.10,000 வழங்கப்படும். எல்லா குடும்ப தலைவிக்கும் ரூ. 2000 பணம் வழங்கப்படும்.. அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஃப்ரிட்ஜ் வழங்கப்படும்.. ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும்.. இனி ஆண்களும் கட்டணம் இல்லாமல் பயணிக்கலம..

இபிஎஸ் பேசிக் கொண்டிருக்கும் போதே, ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற திமுகவின் பிரச்சார பாடல் ஒலிக்கப்பட்டது.. அப்போது இபிஎஸ் ’ என்னப்பா பாட்டு வருது..’ கீழே பார்க்கிறார்.. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது..

எனினும் இந்த வீடியோ போலியானது என்பது தெரியவந்துள்ளது.. இபிஎஸ் பேசும் போது பாடல் ஒலித்தது உண்மை தான்.. அவரும் என்ன பாடல் என்று கீழே பார்க்கிறார்.. ஆனால் அது ‘ஸ்டாலின் தொடரட்டும் பாடல்’ இல்லை.. அங்கு வேறு ஒலித்துள்ளது என்பது தெளிவாகிறது..

Subscribe to my YouTube Channel

Read More : EPS vs OPS| “அந்த ஆள்” “நீயெல்லாம் அதிமுகவையே விற்றிருப்பாய்!” எல்லை மீறும் எடப்பாடி.. பிரச்சாரத்தில் அதிர்ச்சி பேச்சு..!

RUPA

Next Post

ஏசி வாங்கப் போறீங்களா..? இன்வெர்ட்டர் vs நான் இன்வெர்ட்டர்.. இரண்டில் எது பெஸ்ட்..?

Wed Apr 8 , 2026
Are you going to buy an AC? Inverter vs non-inverter.. Which one is the best?
ac

You May Like