குடும்பத்தோடு திமுகவில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் முன் அதிமுகவில் இணைந்த தலைவர்….!

os maniyan 2025

ஒன்றிய திமுக நிர்வாகி செல்வி சேவியர், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.


மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்று, மக்கள் ஸ்டாலின் ஆட்சியை அகற்ற கோவையில் 7.7.2025 அன்று துவங்கிய எழுச்சிப் பயணம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதியில் துவங்கி, 150-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிகரமாக மக்களை நேரடியாக சந்தித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

விறுவிறுப்பாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிச்சாமி, கட்சியைப் பலப்படுத்துவதிலும் தீவிரம் காட்டி வருகிறார். சமிபத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி ஏற்பாட்டில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மாற்றுக்கட்சியை சேர்ந்த 1,000 பேர் அதிமுகவில் இணைந்தனர். அதேபோல பல்வேறு முக்கிய மாற்றுக் கட்சியை சேர்ந்த தலைவர்களும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மாநில நிர்வாகியும் சமீபத்தில் அக்கட்சியில் இணைந்தார்.

2021-ல் டெல்டாவில் விட்டதை, வரும்தேர்தலில் பிடிக்க அதிமுக தீவிரம்காட்டுகிறது. அதன் ஒருபகுதியாகவே,மழை பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல் நபராக சென்று எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார். மாற்றுக் கட்சியில் இருந்து வருபவர்களுக்கு அதிமுகவில் முழு பாதுகாப்பு, தேவையான உதவிகள் கிடைக்கும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். ஒருபுறம் மாற்றுக்கட்சியினரை அதிமுகவில் இணைக்கும் பணிகளும் நடக்கிறது. அந்த வகையில், தலைஞாயிறு மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகி செல்வி சேவியர், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.

Vignesh

Next Post

அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்...! தமிழகத்தில் இன்று முதல் 5-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு...!

Fri Oct 31 , 2025
தமிழகத்தில் இன்று முதல் 5-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 4-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 5-ம் தேதி ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது […]
heavy rain

You May Like