தருமபுரி மாவட்டத்தில் டிசம்பர் 2025 வரை வட்டாரத்திற்கு 3 உயர் மருத்துவ சேவை முகாம்கள் வீதம் மொத்தம் 30 முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 21.04.2025 அன்று உயர் மருத்துவ சேவைகள் வழங்க மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த 02.08.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் டிசம்பர் 2025 வரை வட்டாரத்திற்கு 3 உயர் மருத்துவ சேவை முகாம்கள் வீதம் மொத்தம் 30 முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
“நலம் காக்கும் ஸ்டாலின்” உயர் மருத்துவ சேவை முகாமில் பொது மருத்துவம். பொது அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு மருத்துவம், பேறுகால மருத்துவம். குழந்தை நல மருத்துவம், இதயநல சிறப்பு மருத்துவம், நரம்பியல் சிறப்பு மருத்துவம், நுரையீரல் சிறப்பு மருத்துவம், நீரிழிவு நோய்கான சிறப்பு மருத்துவம், தோல் சிறப்பு மருத்துவம், பல் மருத்துவம். கண் சிறப்பு மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மன நல மருத்துவம், இயன் முறை மருத்துவம், இயற்கை மருத்துவம், உளவியல் ஆலோசணை ஆகிய 17 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சைகள், சிறப்பு மருத்துவ நிபுணர்களால் வழங்கப்படுகிறது.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் வளர்ச்சி குன்றிய குழந்தைகள், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள். இதய நோயாளிகள், படுக்கையுற்ற நோயாளிகள் மற்றும் மாற்றுதிறனாளிகளை இலக்காக கொண்டு இம்முகாம்கள் நடத்தப்படுகின்றது. முகாமில் பரிசோதனைக்கு வரும் அனைத்து நபர்களுக்கும் ஆபா கார்ட் (ABHA CARD) உருவாக்கப்படும். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைக்கு (CMCHIS) பதிவு செய்து தரப்படும். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் (CMCHIS) கீழ் மேல் பரிசோதனைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.
இம்மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் (DISABILITY CERTIFICATE) வழங்கப்படும். கண்புரை உள்ள நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். எனவே, தருமபுரி மாவட்டத்தில் பயன்படுத்திக்கொள்ளுமாறு உள்ள பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



