#Get ready for Thunivu Pongal – பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது அஜித்தின் “துணிவு” அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத்-அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் துணிவு. இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் வீரா, பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பாவனி, சிபி ஆகியோரும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.


மேலும் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இந்தப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். 1987 – இல் பஞ்சாபில் நடந்த ஒரு கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ‘துணிவு’ திரைப்படம் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு தீபாவளிக்கு துணிவு படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பு முடியாத காரணத்தால் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்றை ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்தின் துணிவு படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆவது உறுதி எனவும் எல்லோரும் துணிவு பொங்கலுக்கு தயாராகுங்கள் எனவும் அறிவித்துள்ளது. அஜித்தின் படம் பொங்கலுக்கு ரிலீஸ் என்ற செய்தி கேட்ட ரசிகர்கள் #THUNIVU என்ற ஹாஷ்டாக்கை ட்ரெண்ட் ஆக்கி ட்விட்டர் பக்கத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

Newsnation_Admin

Next Post

கர்ப்பிணியாக்கி விட்டு, வேறொரு பெண்ணுடன் திருமணம்.. முகூர்த்த நேரத்தில் நிறுத்திய ஆசிரியை.!

Fri Oct 28 , 2022
திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் வத்தலகுண்டு அருகே பாலமுருகன் என்பவர் ஒத்தப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் ஒரு ஆட்டோ டிரைவர் இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் இவரது முதல் மகள் நாக பிரியா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் உடன் இரண்டு ஆண்டுகளாக காதல் ஏற்பட்டு இருக்கின்றது. சின்னசாமி பெங்களூரில் இருக்கும் ஒரு ஐடி சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். […]
201805031533014928 hindu Marriage best days SECVPF

You May Like