Gold | ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.16,800..? அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்..!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிகரித்து வருகிறது. 2024ஆம் ஆண்டின் காலாண்டில் தங்கம் விலை சுமார் 13% உயர்ந்துள்ளது. இந்நிலையில், தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்த தேர்வாக இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். CNBC-ல் சமீபத்தில் நடைபெற்ற உரையாடலில் பங்கேற்ற விக்னஹர்டா கோல்டு நிறுவனத்தின் தலைவர் மகேந்திர லூனியா, 2030-க்குள் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1.68 லட்சத்தை எட்டும் என்று கூறியுள்ளார். அப்படியானால் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.16,800 ஆக இருக்கும்.

தங்கத்தின் இந்த கடும் விலை உயர்வுக்கு சர்வதேச அரசியலில் நிலவும் பிரச்சனைகள் முதல் உலகப் பொருளாதார மந்தநிலை வரை காரணமாக கூறப்படுகிறது. மேலும், பண வீக்கம், தங்கத்தின் தேவை அதிகரிப்பு, தங்கச் சுரங்க உற்பத்தியில் தேக்கம் என பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. பங்குச்சந்தை கணிக்க முடியாததாக உள்ளதால், தங்கம் விலை குறையும் என எதிர்ப்பார்க்க முடியாது. மாறாக தங்கத்தின் விலை உயர்வை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவற்றில் முதலீடு செய்வது நல்ல தேர்வாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் ஆபரண தங்கத்தில் முதலீடு செய்வதை விட தங்கப் பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்வது சிறந்த தேர்வாக இருக்கும். ஆண்டுக்கு பலமுறை மத்திய அரசு SGB எனப்படும் தங்கப் பத்திரங்களை ஏலம் விடும். அதில் நீங்கள் முதலீடு செய்யலாம். நீங்கள் ஒரு தனிநபராக இருந்தால் 4 கிலோ வரை முதலீடு செய்யலாம். இதுவே, நீங்கள் அறக்கட்டளைக்கு வாங்க விரும்பினால் 20 கிலோகிராம்கள் வரை வாங்கலாம்.

Read More : மாதம் ரூ.1,10,400 சம்பளம்..!! BHEL நிறுவனத்தில் சூப்பர் வேலை..!! டைம் இல்ல..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Chella

Next Post

"அரிசி இறக்குமதிக்கு மீண்டும் தடை விதிப்போம்!" ; பாகிஸ்தானை எச்சரிக்கும் ரஷ்யா

Mon Apr 22 , 2024
ரஷ்யாவினால் முன்வைக்கப்படும் சர்வதேச தரத்தை சரக்குகளில் கவனிக்கப்படாவிட்டால் அரிசி இறக்குமதியை மீண்டும் தடை செய்ய போவதாக ரஷ்யா பாகிஸ்தானை எச்சரித்துள்ளது. சுகாதார பாதுகாப்பு காரணங்களுக்காக 2019 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதிக்கு ரஷ்யா தடை விதித்தது. இதேபோல், 2006 டிசம்பரில், உணவுப் பாதுகாப்புத் தரத்தை பூர்த்தி செய்யாததால் பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதை ரஷ்யா நிறுத்தியது. இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியில் சர்வதேச […]

You May Like