தொடர்ந்து ட்விஸ்ட் கொடுக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

Gold jewellery 1 1

சென்னையில் இன்று 2-வது நாளாக ஆபரணத் தங்கம் விலை மாற்றமின்றி, ஒரு சவரன் ரூ.1,16,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.14,500-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.1,16,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

அதே போல் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.290க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.2.90 லட்சத்திற்கு விற்பனையாகிறது. சென்னையில் தொடர்ந்து 5-வது நாளாக வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது..

Read More : இன்று 16 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..! வானிலை மையம் அலர்ட்..!

English Summary

In Chennai today, for the second consecutive day, the price of ornamental gold remains unchanged, with one sovereign being sold at ₹1,16,000.

RUPA

Next Post

Flash : எஸ்.ஜே.சூர்யாவின் கில்லர் படப்பிடிப்பில் பயங்கர விபத்து.. ஒருவர் பலி..!

Wed Jun 3 , 2026
வாலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே. சூர்யா.. முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த குஷி, நியூ, அன்பே ஆயிருரே ஆகிய படங்களை இயக்கினர்.. ஆனாலும் தொடர்ந்து ஸ்பைடர், மெர்சல், மாநாடு, டான், ஜிகர்தண்டா 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.. தனது நேரத்தியான நடப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் ஒரு நடிகராகவும் இடம் பிடித்தார்.. இந்த நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா 10 […]
sj surya accident

You May Like