சென்னையில் தங்கம் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு இன்று சற்றே நிம்மதியான செய்தி வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று கணிசமாக குறைந்துள்ளது. நேற்றைய தினம் 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் விலை ரூ.14,220க்கும் ஒரு சவரன் ரூ.1,13,760க்கும் விற்பனையானது.
இந்நிலையில் நேற்றைய தினத்தை விட இன்றைய தினம் தங்கத்தின் விலை மிக குறைந்ததுள்ளது. இன்றைய வர்த்தக நிலவரப்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.180 குறைந்து ரூ.14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சவரனுக்கு ரூ.1,440 வரை குறைந்து ரூ.1,12,320-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் இன்றைய தினம் குறைந்து காணபடுகிறது. அதன்படி வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.255க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து ரூ.2,55,000 விற்கபப்டுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள், அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் லாபப் பதிவு நடவடிக்கைகள் ஆகியவை தங்க விலையை பாதித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தங்கம் விலை குறைந்துள்ளதால் நகை வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும் சர்வதேச பொருளாதார சூழ்நிலையைப் பொறுத்து அடுத்த சில நாட்களில் விலையில் மீண்டும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.



