அக். 23ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! புயலாக மாறுமா? அதி கனமழை வெளுத்து வாங்கும்! வானிலை மையம் எச்சரிக்கை!

cyclone n

தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக். 15 முதல் தீவிரமடைந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக சென்னை உள்ளிட்ட கடலோர மற்றும் உள் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை கொட்டித் தீர்த்து வருகிறது. பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.


இதற்கிடையே, அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் ஆகிய இரு பெருங்கடல் பரப்புகளிலும் அடுத்தடுத்து சுழற்சிகள் தீவிரமடைந்து வருகின்றன. தென்மேற்கு அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்து வலுப்பெற்று அதே பகுதியில் நீடிக்கிறது. இது அடுத்த 12 மணி நேரத்திற்குள் மேற்கு மற்றும் வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து, அக். 21-ல் வலுவிழக்கத் தொடங்கும் எனவும், பின்னர் அக். 22-க்குள் ஆப்பிரிக்காவின் சோமாலியா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், வங்கக்கடலில் புதிய வானிலை மாற்றம் உருவெடுக்கத் தொடங்கியுள்ளது. தாய்லாந்து வளைகுடா மற்றும் மியான்மர் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது நாளை (அக். 21) காலைக்குள் வடக்கு அந்தமான் கடல் பகுதியை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதன் உந்துதலால், வரும் அக். 23-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பரப்பில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் சூழல் நிலவுகிறது. இந்த அமைப்பு மேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழகத்தில் மழைப் பொழிவு மேலும் அதிகரிக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More : இன்று முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்! சென்னைக்கு ஆபத்தா? வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சொன்ன முக்கிய தகவல்!

Next Post

10 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்! இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் அதி கனமழை! லிஸ்டில் எந்தெந்த மாவட்டங்கள்?

Tue Oct 20 , 2026
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழை பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை வெளுத்து வாங்கக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதேபோல், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, […]
Rain 2026

You May Like