பள்ளி முதல் கல்லூரி வரை… மாணவர்களின் கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கிய தமிழக அரசு..

cm vijay n 4

பள்ளிப் படிப்பு முதல் மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்வி வரை பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில் முக்கிய மாற்றத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆதிதிராவிட மாணவர்களுக்கு இணையான தொகையைப் பழங்குடியின மாணவர்களுக்கும் வழங்குவதற்காக ரூ.4.31 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


இந்த மாற்றத்தின் மூலம் மொத்தம் 59,498 பழங்குடியின மாணவர்கள் பயன்பெற உள்ளனர். இதில் 11ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி வரை பயிலும் 35,078 மாணவர்களுக்கான உதவித்தொகை வேறுபாட்டைச் சரிசெய்ய ரூ.2.54 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 10ஆம் வகுப்புக்கு முந்தைய வகுப்புகளில் படித்து வரும், விடுதியில் தங்காத 24,417 மாணவர்களுக்காக ரூ.1.22 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வி பயிலும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களின் கூடுதல் மருத்துவக் கட்டணச் செலவுகளுக்காக ரூ.55.20 லட்சமும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதில் இருந்த தொகை வேறுபாட்டை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரே கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களிடையே உதவித்தொகையில் ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்ற நோக்கில், பழங்குடியினருக்கான சிறப்பு கல்வி உதவித்தொகைத் திட்டத்தைச் செயல்படுத்த அரசு முன்வந்துள்ளது.

இதற்கான கூடுதல் செலவினத்தை மாநில அரசே ஏற்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி மற்றும் தொழில்முறைப் படிப்புகளில் பழங்குடியின மாணவர்கள் சேர்வதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதுடன், கல்வியில் சமத்துவத்தை மேம்படுத்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

Also Read: “நானும் ரிஷிகாந்தும் ஒரே ஆள்தான்!” – நடிகர் மணிகண்டன் சொன்ன அந்த விஷயம்!

Saranya

Next Post

திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!. 16 பேர் பலி; 46 பேர் காயம்!. 300க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டம்!. மீட்புப் பணிகள் தீவிரம்!

Fri Oct 23 , 2026
திபெத்தில் ஏற்பட்ட 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர் மற்றும் 46 பேர் காயமடைந்துள்ளனர். இந்த பயங்கர நிலநடுக்கத்தால் 300க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுவினர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். உள்ளூர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி அரசு ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, நிலநடுக்கத்தின் காரணமாக 339 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்தோ அல்லது பலத்த சேதமடைந்தோ […]
tibet earthquake 30kb

You May Like