Breaking : கடன் வாங்கியவர்களுக்கு குட்நியூஸ்..! ரெப்போ வட்டி விகதத்தில் மாற்றம் இல்லை.. ரிசர்வ வங்கி அறிவிப்பு..!

rbi repo

ரெப்போ விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும்போது நிர்ணயிக்கும் வட்டி விகிதமாகும். இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. ரெப்போ வட்டி விகிதம் கடந்த மாதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 5.25% ஆக இருந்தது..


இந்த நிலையில் வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி ரெப்போ விகிதம் 5.25% ஆகவே தொடர்கிறது.

ரிசர்வ் வங்கி தனது கொள்கை நிலைப்பாட்டை ‘நடுநிலை’யாகப் பராமரித்து வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறினார். ரெப்போ விகிதத்தை 5.25 சதவீதமாக மாற்றாமல் வைத்திருக்க பணவியல் கொள்கைக் குழு (MPC) முடிவு செய்துள்ளது.

ரெப்போ விகிதத்தை 5.25 சதவீதமாக மாற்றாமல் வைத்திருக்க பணவியல் கொள்கைக் குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறினார்.

தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்களால் ஏற்பட்ட அதிகரித்த நிச்சயமற்ற தன்மை, பொருளாதாரக் கண்ணோட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறினார். “உயர் அதிர்வெண் குறிகாட்டிகள் தொடர்ச்சியான உத்வேகத்தையும் பொருளாதார நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டுகின்றன,” என்று அவர் கூறினார்.

ரெப்போ விகிதம் என்பது வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து குறுகிய கால கடன்களைப் பெறும்போது, ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டி விகிதமாகும். இந்த விகிதம், பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.

உதாரணமாக, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தினால், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் வாங்குவது விலை உயர்ந்ததாக இருக்கும், இதனால் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களின் வட்டி விகிதத்தையும் அதிகரிக்கும். ஆனால் தற்போது ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை என்பதால் வங்கிகளும் கடன் விகிதத்தை மாற்றாது. இதனால் வாடிக்கையாளர்களுக்கும் வட்டி விகிதத்திலும், கடன்களுக்கான EMIயிலும் மாற்றம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது..

Read More : வாகன ஓட்டிகளுக்கு ஷாக்..! இனி ரொக்கமாக பணம் செலுத்த முடியாது..! புதிய விதிகள்..!

RUPA

Next Post

ஆண் நண்பருடன் சென்ற மனைவியை போலீஸ் கண்முன்னே குத்தி கொன்ற கணவன்..! பகீர் பின்னணி..

Wed Apr 8 , 2026
Husband stabs wife to death in front of police in Telangana state for going out with boyfriend
affair murder 1

You May Like