மாணவர்களுக்கு செம குட் நியூஸ்..!! பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!

கோடை விடுமுறையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

10ஆம் வகுப்பு, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் பிற வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வு நடைபெற்று முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒரு சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், விடுமுறை காலங்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில், ”பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகவும், இதனால் மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இந்த புகார் தொடர்பாக அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை தவிர்க்குமாறும், மாணவர்களை சிறப்பு வகுப்புகளுக்கு வரவழைக்க அழுத்தம் தரக்கூடாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்கூறப்பட்ட ஆணையை தவறாது கடைபிடிக்க வேண்டும் என்றும், தவறினால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அனைத்து வகைப்பள்ளி தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More : கடன் வாங்குவதற்கு முன் இதையெல்லாம் தெரிஞ்சிக்கோங்க..!! அப்புறம் சிக்கல் உங்களுக்கு தான்..!!

Chella

Next Post

தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... பீதியில் மக்கள்..! ரிக்டர் அளவு 6.3 ஆக பதிவு...!

Tue Apr 23 , 2024
தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம். ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. தைவானின் கிழக்கு மாகாணமான Hualien இல் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் தலைநகர் தைபேயில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் 10 கிமீ (6.2 மைல்) ஆழத்தில் இருந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தைவானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் […]

You May Like