Flash : குட்நியூஸ்.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா..?

gold jewlery

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி இன்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.50 குறைந்து ரூ.14,250-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.400 குறைந்து, ரூ.1.14,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று தங்கம் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எனினும் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.275க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.2.75 லட்சத்திற்கு விற்பனையாகிறது..

Read More : சில மணி நேரங்களிலேயே முடிவை மாற்றிய டிரம்ப்.. போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு.. ஈரான் என்ன சொல்கிறது..?

RUPA

Next Post

No Sugar Challenge: 30 நாட்கள் சர்க்கரையை தவிர்த்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்..?

Wed Apr 22 , 2026
No Sugar Challenge: What changes will happen to the body if you avoid sugar for 30 days?
sugar

You May Like