மகிழ்ச்சி செய்தி…! ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும்…! முதல்வர் அசத்தல் அறிவிப்பு…!

Magalir Urimai Thogai 2025

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ம் கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும் என தெரிவித்தார்.


தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் பயனடைந்த மற்றும் சாதனை படைத்த பெண்களின் வெற்றி கதைகளை வெளிக்கொணரும் நிகழ்வாக சென்னையில் `வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ எனும் தலைப்பில் தமிழகத்தின் சாதனை பெண்களின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. இதில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ம் கட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, 10 பேருக்கு உரிமைத் தொகைக்கான ஏடிஎம் அட்டைகளை வழங்கினார்.

பின்னர் பேசிய அவர்; கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. விடியல் பயணம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் வாயிலாக ஒவ்வொரு குடும்பத்திலும் பணப்புழக்கமும், சேமிப்பும் அதிகரித்திருக்கிறது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்​டத்​தில் இது​வரை, 1 கோடியே 13 லட்​சத்து 75,492 பேருக்கு வழங்​கி​யிருக்​கிறோம். இந்த எண்​ணிக்​கையை அதி​கரித்​து, 16 லட்​சத்து 94,339 பேருக்கு ரூ.1,000 போட்டுவிட்டோம். இனி 1 கோடியே 30 லட்​சத்து 69,831 பேருக்கு மாதம் தொடர்ந்து ரூ.1,000 கிடைக்​கும். தலைநிமிரும் தமிழகத்​தில், பெண்​கள் உயர்ந்து நடை​போட, நிச்​ச​யம் உரிமைத்​தொகை​யும் உயரும். இந்த தொகை உங்​களின் உயர்​வுக்கு மட்டுமல்ல, உங்​கள் குழந்​தைகளின் கல்விக்கு பயன்பட வேண்​டும். தலை​முறை​கள் தழைக்க பெண்​கள் முன்னேற்ற​மும், பெண் கல்​வி​யும் அவசி​யம் என்றார்.

Vignesh

Next Post

2027-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த ஒப்புதல்...! ரூ.11,718.24 கோடி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு...!

Sat Dec 13 , 2025
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை, ரூ.11,718.24 கோடி செலவில் 2027-ம் ஆண்டுக்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு உலகின் மிகப்பெரிய நிர்வாக மற்றும் புள்ளிவிவரப் பணியாகும். இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு – ஏப்ரல் முதல் செப்டம்பர், 2026 வரை நடத்தப்படும். மக்கள் […]
money Central govt modi 2025

You May Like