PM MODI| விதிமுறைகளை மீறிய கூகுள் ‘Gemini AI’… பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து.! மத்திய அரசு குற்றச்சாட்டு.!

கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தளமான ஜெமினி(Gemini AI) பிரதமர் மோடியை(PM MODI) பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என அழைக்கப்படும் சேர்க்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்து இருக்கிறது.

தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னணி நிறுவனங்கள் தங்களது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தளங்களை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணையதளத்தில் ஜாம்பவானாக விளங்கும் கூகுள் ஜெமினி(Gemini AI) என்ற தனது செயற்கை நுண்ணறிவு தளத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

சாட் ஜிபிடி இணையதளத்திற்கு போட்டியாக உருவாக்கப்பட்ட கூகுள் ஜெமினி நாம் கேட்கும் கேள்விகளுக்குரிய தகவல்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் நமக்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த செயலியில் பிரதமர் மோடி குறித்து கேட்ட கேள்விக்கு மோடி ஒரு பாசிஸ்ட் என அந்த இணையதளம் பதிலளித்துள்ளது. மேலும் டொனால்ட் டிரம்ப் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு இது தொடர்பாக கூகுள் சர்ச் இன்ஜினை நாடுங்கள் என பதில் அளித்து இருக்கிறது. இந்த 2 ஸ்கிரீன் ஷாட் களையும் ஒருவர் தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்ததை தொடர்ந்து இந்தப் பிரச்சனை வைரலானது.

இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கும் கூகுள் நிறுவனம் ஜெமினி செயற்கை நுண்ணறிவு தளம் வெளியிடும் அரசியல் பதிவுகளில் நம்பகத்தன்மை இருக்காது என தெரிவித்திருக்கிறது. எனினும் மத்திய அரசு கூகுளின் ஜெமினி விதிமுறைகளை மீறுவதாக குற்றம் சாட்டியிருக்கிறது. மேலும் கூகுள் நிறுவனத்திற்கு மத்திய அரசு சார்பாக நோட்டீஸ் அனுப்ப இருப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

English Summary: Google Gemini AI Termed PM Modi as fascist. Central Govt Accused that it violate regulations. Google explain that its political answers are not accurate.

Next Post

தேவையில்லாத அழைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த TRAI..! நெட்வொர்க் நிறுவனங்களுக்கு புதிய உத்தரவு..!

Sun Feb 25 , 2024
TRAI: தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்வது என்பதையும் தாண்டி இணையதள உபயோகம் மற்றும் பணப்பரி மாற்றங்கள் வங்கி சேவைகள் ஆன்லைனில் பொருட்களை வாங்குவது என அனைத்திற்கும் செல்போன்கள் இன்று பயன்படுத்தப்படுகிறது. ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சியால் இவை அனைத்தும் சாத்தியமாகி இருக்கிறது. எனினும் செல்போன்களால் பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு வரும் தேவையில்லாத அழைப்புகள் மற்றும் ஆபாச அழைப்புகளால் பல்வேறு மன உளைச்சல்கள் ஏற்படுகிறது. மேலும் பல நபர்கள் […]

You May Like