வாரத்தில் 3 நாட்களுக்கு அரசுப் பேருந்து சேவைகள் நிறுத்தம்..!! போக்குவரத்துக் கழகத்தின் முடிவால் பயணிகள் அதிர்ச்சி..!!

TN Bus 2025

தமிழ்நாட்டில் பயணிகள் நடமாட்டம் குறைவாக உள்ள வார நாட்களில், போதிய வருவாய் ஈட்டாத அரசுப் பேருந்து சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் திட்டமிட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துப் போக்குவரத்து மண்டலங்களிலும் குறைவான வருவாய் உள்ள வழித்தடங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.


முதற்கட்ட நடவடிக்கையாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டலத்திற்கு உட்பட்ட விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 136 புறநகர் பேருந்துகளின் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பயணிகள் கூட்டம் குறைவாக இருக்கும் செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த தற்காலிகச் சேவைக் குறைப்பு அமல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது. அதேவேளையில், பண்டிகைகள், முகூர்த்த நாட்கள் மற்றும் உள்ளூர்த் திருவிழாக்கள் போன்ற கூட்ட நெரிசல் மிகுந்த காலங்களில் கூடுதல் சிறப்புப் பேருந்துகளை இயக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இத்தகைய நடவடிக்கைக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கிராமப்புறங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர் மற்றும் அன்றாட வேலைக்கு செல்வோர் அரசுப் பேருந்துகளையே பெரிதும் சார்ந்திருக்கும் நிலையில், வணிக ரீதியான லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு பேருந்துகளை நிறுத்துவது அரசின் பொதுச் சேவை நோக்கத்தையே கேள்விக்குறியாக்கும் என சி.ஐ.டி.யு (CITU) நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள், ஏற்கனவே அதிக பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்கள் மற்றும் தனியார் பேருந்துகளின் போட்டி இல்லாத பகுதிகளிலேயே இத்தகைய மாற்றங்கள் செய்யப்படுவதாக கூறியுள்ளனர். இது முழுமையான ரத்து அல்ல என்றும், நிர்வாக திறனை மேம்படுத்துவதற்கான ஒரு தற்காலிக நடவடிக்கை என்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More : திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு..!! செப்.1 முதல் செல்போன் எடுத்துச் செல்ல தடை..!! அறநிலையத்துறை அதிரடி உத்தரவு..!!

Next Post

"49 ஆண்டுகளில் இதுவே முதல்முறை!" உலக பேட்மிண்டன் அரங்கையே அதிர வைத்த இந்திய சிங்கம் ஆயுஷ் ஷெட்டி!

Wed Aug 19 , 2026
இந்திய பேட்மிண்டன் இளம் நட்சத்திரம் ஆயுஷ் ஷெட்டி, உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் 49 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை எவருமே செய்யாத ஒரு பிரம்மாண்ட வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். டெல்லியில் உள்ள இந்திராகாந்தி அரங்கில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 17) நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், நடப்பு சாம்பியனும் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ளவருமான சீனாவின் ஷி யு கியை வீழ்த்தி ஆயுஷ் ஷெட்டி அதிரடி வெற்றி […]
AyushShettyWorldRecord

You May Like