8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் அரசு நிறுவனத்தில் வேலை ரெடி….! நீங்க ரெடியா…..?

கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக இருக்கின்ற அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆர்வமும், தகுதியும் கொண்ட விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம்.


காலி பணியிட விவரம்-1 அலுவலக உதவியாளர்

இன சுழற்சியின் அடிப்படையில் இந்த பதவிக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர் மரபினர் வகுப்பைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும் என்று கூறப்படுகிறது.

இதற்கு குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு 1/7/ 2023 அன்று விண்ணப்பதாரரின் வயது 18 லிருந்து 37க்குள் இருக்க வேண்டும். பணிக்கான ஊதியம் 15,700 என்று கூறப்பட்டுள்ளது.

முழுவதும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சுய விலாசமிட்ட 50 ரூபாய்க்கான தபால் தலை ஒட்டப்பட்ட உரையுடன் பதிவு தபால் மூலமாக 10 5 2023 ஆண்டு மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்வதற்கு இந்த இணைப்பை கிளிக் செய்யலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி.

தலைவர்

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்
107/1 நாமலடியால் காம்ப்ளக்ஸ் முதல் தளம் அண்ணா நகர் தான்தோன்றிமலை கரூர்-639005

நேர்முகத் தேர்வு தொடர்பான தகவல் தபால் மற்றும் அலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் அல்லது whatsapp மூலமாக தெரிவிக்கப்படும்

Next Post

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினி..!! ரகசியமாக நடந்த ஃபோட்டோஷூட்..!!

Sun May 7 , 2023
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், விநாயகன், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நெல்சனின் முந்தைய படங்களைப் போல இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயன் […]
WhatsApp Image 2023 03 19 at 5.03.56 PM

You May Like