குட் நியூஸ்..! மகளிர் உரிமை தொகையை ரூ.2,000 ஆக உயர்த்த அரசு திட்டம்…!!

1000 2025 1

மகளிர் உரிமை தொகையை ரூ.2,000 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அல்லது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்பது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழக அரசுத் திட்டமாகும். தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சமூகநீதித் திட்டங்களிலேயே ஒரு மாபெரும் முன்னெடுப்பாக, இந்த மகத்தான ‘மகளிர் உரிமைத் தொகை’ வழங்கும் திட்டம் ஒன்றரை கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்ட வருகிறது.


மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பர்களில் தகுதியானவர்களை மட்டும் அடையாளம் கண்டு ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு கட்டாயம் ரூ.1000 கொடுக்கப்படும் என அரசு சார்பில் தகுதி நிர்ணயம் செய்யப்பட்டது. அதேநேரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், யாரெல்லாம் விண்ணப்பிக்கக்கூடாது, யாருக்கெல்லாம் விதிவிலக்கு இருக்கிறது என்பது தொடர்பான விதிமுறைகளையும் தமிழ்நாடு அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

அந்த விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுமே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான புதிய பயனாளிகளை தமிழ்நாடு அரசு தேர்ந்தெடுக்கும் என்றும் தகுதியில்லாத பெண்கள் விண்ணப்பித்தால் பல்வேறு கட்ட பரிசீலனைக்குப் பிறகு அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். மகளிர் உரிமைத் தொகை பெற புதிதாக விண்ணப்பித்த அவர்களுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் மகளிர் உரிமை தொகையை ரூ.2,000 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகளிர் உரிமை தொகையை ரூ.2,000 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான சாத்திய கூறுகளை ஆராய நிதித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 2026 தேர்தலில் அதிமுக வென்றால் ரூ.2,000 உரிமை தொகை வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த நிலையில், ஆளும் திமுக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நிதித்துறை சாதகமான அறிக்கை தந்தால் வரும் ஜனவரி மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.

Vignesh

Next Post

குழந்தை வரம் தரும் சிறப்பு கோயில்கள்..!! தம்பதிகளே கண்டிப்பா ஒருமுறையாவது சென்று வாருங்கள்..!!

Thu Sep 11 , 2025
திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நம்பிக்கையோடு இந்த 5 கோவில்களுக்குச் சென்று வழிபட்டால் நிச்சயம் அதிசயம் நடக்கும் என கூறப்படுகிறது. இந்தக் கோவில்களில் ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான வழிபாட்டு முறையைக் கொண்டுள்ளன. அவற்றைப் பற்றி இங்கு விரிவாகக் காணலாம். திருமணம் மற்றும் குழந்தை வரம் அருளும் தெய்வமாக மதுரை மீனாட்சி அம்மன் திகழ்கிறாள். பாண்டிய மன்னனின் குறை போக்க, அன்னை பராசக்தியே மகளாக அவதரித்த தலம் […]
meenatchi temple 1

You May Like