பெரும் சோகம்..!! கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை மகள் ராஜலட்சுமி காலமானார்..!!

தேசபக்திப் பாடல்கள் மூலம் மக்களிடையே சுதந்திரப் போராட்டத்தை வளர்த்தவர்களில் ஒருவர் நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம். இவர், மகாத்மா காந்தியின் கொள்கைகளால் மிகவும் ஈர்க்கப்பட்டு, இயல்பிலேயே தமக்கிருந்த சாந்த குணத்தால் முழு அகிம்சை வாதியாக வாழ்ந்து வந்தார்.

காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தைத் தமிழ்நாடு முழுவதும் பரப்பியது, ராமலிங்கனார் எழுதிய பாடல் வரிகள்தான். ”கத்தி இன்றி ரத்தம் இன்றி யுத்தம் ஒன்று வருகுது… சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்” என்று அப்போது பாடாத வாயில்லை. அதில் நெஞ்சுரம் அடைந்து சுதந்திரப் போர்க்களம் நோக்கி நடக்காத காலில்லை.

இந்நிலையில், சென்னையில் வசித்து வந்த இவரது மகள் ராஜலட்சுமி, நேற்று (ஏப்ரல் 7) நள்ளிரவு 12.30 மணியளவில் காலமானார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read More : Gold Rate | புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை..!! ஒரு சவரன் ரூ.53,000-ஐ கடந்தது..!!

Chella

Next Post

விக்கிரவாண்டி தொகுதிக்கு எப்பொழுது இடைத்தேர்தல்...? இன்று தேர்தல் ஆணையம் முக்கிய முடிவு...!

Mon Apr 8 , 2024
விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக சட்டப் பேரவை செயலகம் இன்று தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க உள்ளது. விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானதை அடுத்து அந்த தொகுதி காலியாக உள்ளதாக சட்டப் பேரவை செயலகம் இன்று தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க உள்ளது. மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி நடக்க உள்ள நிலையில், குறைவான நாட்களே இருப்பதால் விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் அதே தேதியில் நடத்த வாய்ப்பு குறைவாகவே உள்ளது. […]

You May Like