ஆப்பிரிக்க மண்ணில் மகா யுத்தம்!. உலகக் கோப்பை 2027 கவுண்டவுன் ஸ்டார்ட்!. அட்டவணை ரிலீஸ் தேதி வெளியீடு!

world cup 30kb

2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை, போட்டியை நடத்தும் நகரங்களில் ஒன்றான கேப் டவுனில் வியாழக்கிழமையன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது. இந்த அறிவிப்புடன் சேர்த்து உலகக்கோப்பைக்கான ஓராண்டு கவுண்டவுனும் முறைப்படி தொடங்குகிறது.


முன்னதாக வெளியான தகவல்களின்படி, 2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடரானது காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2, 2027 அன்று தொடங்கி, நவம்பர் 21, 2027 வரை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த உலகக்கோப்பையில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய இரு அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய இடங்களில் 8 அணிகள் ஐசிசி ஒருநாள் தரவரிசையின் அடிப்படையில் நேரடியாகத் தகுதி பெறுகின்றன.

தற்போதைய ஐசிசி தரவரிசைப்படி இந்தியா (1-வது இடம்), நியூசிலாந்து (2), பாகிஸ்தான் (4), ஆஸ்திரேலியா (5), இங்கிலாந்து (6), இலங்கை (7), ஆப்கானிஸ்தான் (8) மற்றும் வங்கதேசம் (9) ஆகிய 8 அணிகள் நேரடியாகத் தகுதி பெறும் நிலையில் உள்ளன. தென்னாப்பிரிக்கா தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்தாலும், போட்டியை நடத்தும் நாடு என்பதால் நேரடியாகத் தகுதி பெறுகிறது. இதனால் 9-வது இடத்தில் உள்ள வங்கதேசத்திற்கும் நேரடித் தகுதி வாய்ப்பு கிடைத்துள்ளது.

தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வேயுடன் இணைந்து நமீபியாவும் இத்தொடரை நடத்துகிறது. இருப்பினும், நமீபியா நேரடியாகத் தகுதி பெறவில்லை; தகுதிச்சுற்றுப் போட்டிகள் மூலமாகவே தகுதி பெற வேண்டும்.

எஞ்சிய 4 இடங்களுக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடத்தப்படும். தற்சமயம் இந்தியாவில் ஒருநாள் தொடரில் விளையாடி வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் இந்தத் தகுதிச்சுற்றுப் போட்டிகளில் விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

வியாழக்கிழமையன்று போட்டி அட்டவணையுடன் சேர்த்து, டிக்கெட் முன்பதிவிற்கான ‘டிக்கெட் பேலட்’ (Ticket Ballot) முறையையும் ஐசிசி தொடங்கவுள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவை மேற்கொள்ளலாம். மேலும், இந்த உலகக்கோப்பைத் தொடர் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு முன்பாக மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது.

1newsnationuser5

Next Post

சிகரெட், மது மட்டுமல்ல... இந்த சாதாரண கிருமிகளும் புற்றுநோயை உண்டாக்குமாம்!. புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Tue Sep 29 , 2026
பொதுவாக புற்றுநோய் என்றாலே மரபணுக்கள், புகையிலை பயன்பாடு, காற்று மாசுபாடு, மதுபானம், தவறான உணவுப் பழக்கம் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால்தான் ஏற்படுகிறது என்று நாம் நினைக்கிறோம். ஆனால், சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு ஒன்று முற்றிலும் மாறுபட்ட ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. ‘தி லான்செட் ஆன்காலஜி’ (The Lancet Oncology) மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வின்படி, உலகளவில் கண்டறியப்படும் புதிய புற்றுநோய் பாதிப்புகளில் 12% (அதாவது 8-ல் […]
Cancer 3 2025

You May Like