சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை அதிரடியாக சரிவடைந்துள்ளது.
நேற்று முன்தினம் சவரனுக்கு ₹160 குறைந்து ஒரு சவரன் ₹1,20,080-க்கு விற்பனையான தங்கம், நேற்று விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலையில் நீடித்தது. இந்நிலையில், இன்று காலையில் சவரனுக்கு ₹560 குறைந்து ஒரு சவரன் ₹1,19,520-க்கும், கிராமுக்கு ₹70 குறைந்து ₹14,940-க்கும் வர்த்தகமானது. அதனைத் தொடர்ந்து இன்று பிற்பகலில் 2-வது முறையாக தங்கம் விலை மேலும் சரிவை சந்தித்தது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பிற்பகலில் சவரனுக்கு மேலும் ₹1,720 குறைந்து ஒரு சவரன் ₹1,17,800-க்கும், கிராமுக்கு ₹215 குறைந்து ஒரு கிராம் ₹14,725-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு மொத்தம் ₹2,280 வரை சரிந்துள்ளது. அதேவேளையில், வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ₹265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ₹2,65,000-க்கும் விற்பனையாகி வருகிறது.
Read More : கவின் – நயன்தாராவின் ‘ஹாய்’.. தியேட்டருக்கு போகலாமா, வேண்டாமா? ரசிகர்களின் முதல் விமர்சனம் இதோ!



